இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு


சாதன அனுமதிகள் - கம்பித் தொடர்பற்ற உபகரணங்கள்

இலங்கை தொலைத்தொடர்பு சட்டத்தின் பிரிவு 5(o), 5(q) மற்றும் 5(v) இன் படி. 1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் திருத்தப்பட்டவாறு தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு (TRCSL) பின்வருவன தொடர்பில் சட்டப்பூர்வ கடமை உள்ளது:

  1. தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவதற்கான தொழில்நுட்ப தரநிலைகள் மற்றும் நடைமுறைகளை குறிப்பிடுதல்;
  2. தொலைத்தொடர்பு முறைமையுடன் இணைக்கப்படக்கூடிய தொலைத்தொடர்பு சாதனங்களின் வகைகளை அங்கீகரித்தல்;
  3. மின் சாதனங்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்படாத வானொலி அலைவரிசை வெளியிடல்களால் உற்பத்தி செய்யப்படும் மின்காந்த இடையூறுகளைக் குறைப்பதற்கு விதிகளுக்கு இணங்கச் செய்து அமுல்படுத்தல்.

இலங்கையில் பயன்படுத்தப்படும் வானொலி மற்றும் தொலைத்தொடர்பு முனைய உபகரணங்கள் (RTTE) தேசிய மற்றும் சர்வதேச ஒழுங்குமுறை தரநிலைகள் மற்றும் இணக்கத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கான தேவைகளுக்கு இணங்க வேண்டும்.

வகை அங்கீகாரம் RTTE பொருத்தமான தேசிய மற்றும் சர்வதேச தரங்களுக்கு இணங்குவதையும் வகை அங்கீகரிக்கப்பட்ட RTTE ஏனைய தொடர்பாடல் முறைமைகளுக்கு குறுக்கீடு செய்யாது அல்லது நுகர்வோருக்கு உடல்நலம் மற்றும் பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தாது என்பதையும் உறுதி செய்கிறது.

RTTE இன் வகை அங்கீகாரம் பற்றிய மேலதிக தகவலுக்கு, கீழே உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்யவும்.