இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு


தொழிநுட்பப் பரீட்சைகள்

ஆணைக்குழுவிற்கு TRCSL சட்டத்தின் கீழ் தொழிநுட்பம் சார் பரிசோதனைகளை நடாத்தவும், விண்ணப்பதாரிகள் குறித்த பரீட்சைகளில் விதந்துரைத்துள்ளவாறு தேர்ச்சி நிலைகளை அடைந்திருந்தால் அவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் வருடத்திற்கு ஒரு முறை ஆங்கில மொழியில் நடாத்தப்படும். விண்ணப்பப் படிவங்களை ஆணைக்குழுவிலிருந்து இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் அல்லது பரீட்சைத் திகதிக்கு நான்கு வாரங்களுக்கு முன்பு வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் அறிவித்தலினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.
ஆணைக்குழு தற்போது கீழே குறிப்பிடப்படுகின்ற பரீட்சைகளை நடாத்துகின்றது.

  1. அமெச்சூர் (விழைஞர்) வானொலி இயக்குநர் அனுமதிப்பத்திரப் பரீட்சை

இப்பரீட்சையானது புதிய (நொவிஸ்) வகுப்பு, சாதாரண வகுப்பு மற்றும் உயர் வகுப்பு என மூன்று வகைகளை உள்ளடக்கியுள்ளது. வானொலி விழைஞராக விரும்பும் இலங்கை வானொலி் சமூக அங்கத்தவர்களுக்கே இப்பரீட்சை நடாத்தப்படுகின்றது. பதினான்கு வயதிற்கு மேற்பட்ட எவரும் இப்பரீட்சைக்கு தகுதியுடையவராகும்.
இப்பரீட்சையானது ஒரே அமர்வில் அமர வேண்டிய இரண்டு கட்டாய எழுத்துமூல வினாத்தாள்களைக் கொண்டது. ஒரு வினாத்தாள் மின் தொழிநுட்பவியல் மற்றும் வானொலித் தொடர்பாடல்களுடன் சம்பந்தப்பட்டது. இரண்டாவது வினாத்தாள் உரிமம் பெறுவதற்கான நிபந்தனைகள், இயக்குநர் செயன்முறைகள் போன்ற அம்சங்களுடன் சம்பந்தப்பட்டது.

 

  1. Novice வகுப்பு :
    வினாத்தாள் 1 : அடிப்படை மின்சாரம், வானொலி மற்றும் மின்னணு கோட்பாடு (2 மணித்தியாலங்கள்)
    வினாத்தாள் 2 : உரிம நிபந்தனைகள், இயக்கும் நடைமுறைகள் மற்றும் செயன்முறைகள் (1 மணித்தியாலம்)
    இவ்வகுப்பின் பரீட்சையில் சித்திபெறும் விழைஞர் 4S5xxx call sign க்கு தகுதி பெறுகிறார்.
  2. சாதாரண வகுப்பு
    வினாத்தாள் 1 : அடிப்படை மின்சாரம், வானொலி மற்றும் மின்னணு கோட்பாடு (2 மணித்தியாலங்கள்)
    வினாத்தாள் 2 : உரிம நிபந்தனைகள், இயக்கும் நடைமுறைகள் மற்றும் செயன்முறைகள் (1 மணித்தியாலம்)
    இவ்வகுப்பின் பரீட்சையில் சித்திபெறும் விழைஞர் 4S6xxx call sign க்கு தகுதி பெறுகிறார்.
  3. உயர் வகுப்பு :
    பகுதி 1 :

    வினாத்தாள் 1 : அடிப்படை மின்சாரம், வானொலி மற்றும் மின்னணு கோட்பாடு (2 மணித்தியாலங்கள்)
    வினாத்தாள் 2 : உரிம நிபந்தனைகள், இயக்கும் நடைமுறைகள் மற்றும் செயன்முறைகள் (1 மணித்தியாலம்)
    பகுதி 2:
    செய்முறை Morse code சோதனை (ஒரு நிமிடத்திற்கு 5 சொற்கள்).
    இவ்வகுப்பின் பரீட்சையில் சித்திபெறும் விழைஞர் 4S7xxx call sign க்கு தகுதி பெறுகிறார்.

உலகளாவிய கடல்சார் பாதுகாப்பு முறைமை (GMDSS) பரீட்சைகள்.

கீழே குறிப்பிடுகின்ற கற்கை நெறிகளை நடாத்தும் பொறுப்பு ஆணைக்குழுவினால் கொழும்பு சர்வதேச கடல்சார் மற்றும் பொறியியல் கல்லூரி (CINEC) மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் தொழிநுட்பவியல் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

  1. உலகளாவிய கடல்சார் பாதுகாப்பு முறைமை (GOC) பரீட்சை
  2. உலகளாவிய கடல்சார் பாதுகாப்பு முறைமை (ROC) பரீட்சை

கடல்சார் வானொலி தொடர்பாடல் பரீட்சைகளுக்குப் பதிலாக உலகளாவிய கடல்சார் பாதுகாப்பு முறைமை பரீட்சைகள் நடாத்தப்படுகின்றன. கடலில் உயிர் பாதுகாப்பிற்கான (SOLAS) சர்வதேச சமவாயத்தின் வானொலி தொடர்பாடல் வழங்கல்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சர்வதேச கடல்சார் அமைப்பினால் (IMO) எடுக்கப்பட்ட முயற்சிகளின் விளைவாகவே இக்கற்கை நெறி நடாத்தப்படுகின்றது.
 
ஒரு இடைக்கால ஏற்பாடு என்ற வகையில் உலகளாவிய கடல்சார் பாதுகாப்பு முறைமை பரீட்சைகளின் கோட்பாடு மற்றும் செயன்முறை பரீட்சைகளை நடாத்துமாறு ஆணைக்குழு இந்நிறுவனங்களுக்கு அதிகாரமளித்துள்ளது. தற்போது மாணவர்கள் SOLAS மற்றும் விதிமுறைகள் தொடர்பாக இரண்டு கோட்பாட்டு வினாத்தாள்களிலும் சர்வதேச கடல்சார் அமைப்பின் மாதிரி கற்கைநெறிக்கு இணைவாக “Watch Keeping and Operational Aspects” தொடர்பான செயன்முறைப் பரீட்சையிலும் சித்தியடைய வேண்டும்.