இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு


நில இயங்கு சேவைகள்

(தனிப்பட்ட கையடக்கத் தொலைபேசி, பேஜிங், ட்ரன்கிங், சிடிசன் பேன்ட) விண்ணப்பப் படிவம் / (செல்லிடை) விண்ணப்பப் படிவம்

தனிப்பட்ட அசைதகு வானொலியானது (Private Mobile Radio (PMR)) சில வேளை தொழில்சார் அசைதகு வானொலி என்று அழைக்கப்படுவதுடன், அது வியாபாரிகளை இலக்காகக்கொண்டு மிகவும் குறுகிய தூரங்களில் உள்ளவர்களுடன் தொடர்பினை பேணுவதற்கு விருத்திசெய்யப்பட்டதாகும். அதற்கு டெக்ஸி கம்பனிகளை உதாரணமாக கூறலாம். PMR அவசர நிலைமைகளிலும் பரவலாக பயன்படுத்தப்படுகின்றது. PMR வலைப்பின்னல்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மீள்நிகழ்வி நிலையங்கள் (Repeater stations), ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தள நிலையங்கள் மற்றும் அசைதகு முனைகளும் உள்ளடங்கியிருக்கும். இது ஒரே நிறுவனத்தினால் அல்லது அதன் பயனாளர்களால் சொந்தமாக வைத்திருக்கின்ற மற்றும் இயக்குகின்ற ஒரு உள்சுற்று பயனாளர் குழுவிற்கு சேவையாற்றும்.


PMR முறைமைகளின் ஆரம்பகட்டத்தில் அவை trunked எனும் தொலைத்தடம் முறைமைகளுக்குள் விருத்திசெய்யப்பட்டது. அவற்றுள் மிகவும் குறிப்பிடத்தக்க முறைமை TETRA எனும் புவிப்பரப்பு தொலைத்தடம் வானொலியாகும். தொலைத்தடம் என்பது தொடர்பாடல்கள் வலைப்பின்னலின் வளங்களை பகிரும் ஒரு நுட்பமாகும். அவ்வாறு வலைப்பின்னல் வளங்களின் ஒதுக்கீட்டில் நெகிழ்வுத்தன்மை மற்றும் சிக்கனம் கருத்திற்கொள்ளப்படும். சாதாரணமாக, ஒரு தொடர்பாடல் அலைவரிசை அழைப்பு காலத்திற்காக ஒதுக்கப்பட்டிருப்பதுடன், பின்னர் ஒரே முறைமையிலுள்ள வெவ்வேறு பயனாளர்களின் உபயோகத்திற்காக அது தானாக விடுவிக்கப்படும். இந்த நுட்பம் பல்வகை தள நிலையங்கள் இணைக்கப்படுவதற்கும், அவ்வாறே, தனி தள நிலையத்தினை விட அகன்ற பிரதேசம் முழுவதற்குமான தழுவலையும் சாத்தியமாக்கும்.


PMR முறைமைகள் உள்சுற்று பயனாளர் குழுக்களுக்கு தேவையான குழு அழைப்புக்கள், புஷ்-டூ- டோக் மற்றும் அழைப்பு அமைவு நேரங்கள் போன்ற வசதிகளை வழங்குகின்றது. இவை செல்பேசி முறைமைகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறுகியனவாகும். அதிகமான PMR முறைமைகள் நேரடி முறை இயக்கத்தினை அனுமதிக்கின்றது. இங்கு ஒரு குழுவின் அங்கத்தவர்கள் வலைப்பின்னலின் தழுவல் பிரதேசத்திற்கு அப்பால் இருக்கும் போது ஒருவர் இன்னொருவருடன் நேரடியாக தொடர்புகொள்ளக்கூடிய வாய்ப்புக்களை முனையங்கள் அமைத்துக்கொடுக்கின்றன.

பிரதான அதிர்வெண் பதிவேடு (MFR)

  1. உயர் அதிர்வெண் (HF)
  2. மிகவும் உயர்வாக அதிர்வெண் (VHF)
  3. மீ உயர் அதிர்வெண் (UHF)

தனிப்பட்ட அசைதகு வானொலிக்கான மேற்கூறப்பட்ட அதிர்வெண் அளவைகளில் கீழே குறிப்பிட்டுள்ள வானொலி நிலைய வகைகளைப் பயன்படுத்த முடியும்.

  1. மீள்நிகழ்வி வானொலி நிலையங்கள்
  2. அடிப்படை வானொலி நிலையங்கள்
  3. அசைதகு நிலையங்கள் (வாகனத்தில் நிறுவப்பட்டது)
  4. எடுத்துச் செல்லத்தக்க வானொலி நிலையங்கள்

இந்த வானொலிகள் இரண்டு முறைகளில் இயக்கப்படும்

  1. அரை இருவழி இயங்குமுறை (இரண்டு அதிர்வெண்களில் கடத்தியினூடாக இடம்பெறும் பரிவர்த்தனை)
  2. எளிமையான இயங்குமறை (ஒரு அதிர்வெண்ணில் இடம்பெறும் பரிவர்த்தனை)

PMR முறைமைக்கான அதிர்வெண் உரிமத்திற்கு விண்ணப்பிப்பது எவ்வாறு?

எவரேனும் ஒரு நபருக்கு அல்லது நிறுவனத்திற்கு PMR தொடர்பாடல் வலைப்பின்னலை இயக்க வேண்டிய தேவையேற்பட்டால் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிலிருந்து அதிர்வெண் உரிமத்தினைப் பெற்றுக்கொள்வது அவசியம். குறித்த கோரிக்கையானது வி்ண்ணப்பப் படிவத்துடன் இணைக்கப்பட்டுள்ள விஷேடமான மற்றும் பொதுவான அறிவித்தல்களுடன் இணங்கியொழுகுவது அவசியம்.