இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு


அமெச்சூர் சேவைகள்

அமெச்சூர் வானொலி உரிமத்திற்கு விண்ணப்பிக்கவும் அதனை இயக்குவதற்குமான வழிகாட்டல்கள்.

(அமெச்சூர் வானொலி உரிமத்திற்கு விண்ணப்பிக்க முன்பு இவ்வழிகாட்டல்களை மிகவும் கவனமாக வாசிக்கவும்)

  1. அமெச்சூர் வானொலிக்கான வானொலி அதிர்வெண் கருவிகளைப் பயன்படுத்துவதற்கு உரிமத்தைப் பெற்றுக்கொள்ள விரும்பும் ஒருவர், இலங்கை தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஆணைக்குழுவில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரி கீழே குறிப்பிடுகின்ற தகைமைகளைக் கொண்டிருக்க வேண்டும்.
  2. The applicant making an application to the Commission shall satisfy the following: -

    குறிப்பு - அமெச்சூர் வானொலி பரீட்சை பாடத்திட்டம் - (நொவிஸ்) - புதிய வகுப்பு / சாதாரண வகுப்பு / உயர் வகுப்பு

    1. பதினாறு வயதை விட மேற்பட்டிருத்தல் வேண்டும்,
    2. அமெச்சூர் வானொலி நிலையத்தை இயக்குவதற்கு தேவையான தொழிநுட்ப திறனிருக்க வேண்டும்.
    3. ஆணைக்குழுவினால் நடாத்தப்படுகின்ற எழுத்துமூலம் மற்றும் செயன்முறைப் பரீட்சைகளில் சித்தியடைந்திருக்க வேண்டும்.
  3. ஆணைக்குழுவினால் அமெச்சூர் வானொலிக்கு வழங்கப்படுகின்ற உரிம வகைகள் :
    1. நொவிஸ் வகுப்பு அமெச்சூர் உரிமம், அல்லது
    2. சாதாரண வகுப்பு அமெச்சூர் உரிமம், அல்லது
    3. உயர் வகுப்பு அமெச்சூர் உரிமம்.
  4. ஒரு விண்ணப்பதாரிக்கு (உள்நாட்டு) அமெச்சூர் உரிமத்திற்காக ஒன்றில் ஒரு வருடத்திற்கு அல்லது 5 வருடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  5. அமெச்சூர் வானொலி நிலையத்தினை இயக்குவதற்கான உரிமத்தை வைத்திருக்கும் ஒரு வெளிநாட்டவருக்கு அவர் இலங்கையில் இருக்கும் போது அதனை இயக்குவதற்கு உரிமம் வழங்கப்பட வேண்டும். அவர் வைத்திருக்கும் உரிமத்தின் வகைக்கேற்ப வழங்க வேண்டிய உரிம வகை தீர்மானிக்கப்படும். வெளிநாட்டு விண்ணப்பதாரிகளுக்கு அவர்கள் இலங்கையில் தங்கியிருக்கும் ஒரு வருடத்தை மிகைக்காத காலத்திற்கு விண்ணப்பிக்க முடியும். உரிமம் பெற்றிருக்கும் நபர் தொடர்ந்து அமெச்சூர் வானொலி நிலையத்தை பயன்படுத்த விரும்பினால் அவ்வுரிமம் காலவதியாகுவதற்கு 30 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிப்பது அவசியம். உரிமமின்றி அமெச்சூர் வானொலி நிலையத்தினைப் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
  6. விண்ணப்பதாரியின் விண்ணப்பத்தில் வழங்கப்பட்டுள்ள விடயங்களை நன்கு பரிசீலித்து விட்டு, ஆணைக்குழுவினால் விதந்துரைத்துள்ள உரிமக் கட்டணத்தை செலுத்திய பிறகு உரிமம் வழங்கப்படும். ஆணைக்குழு அமெச்சூர் வானொலி உரிமக் கட்டணங்களை காலத்திற்குக்காலம் வர்த்தமானியில் பிரசுரிக்கின்றது.
  7. உரிமம் பெற்றிருப்பவரின் கோரிக்கையைக் கருத்திற்கொண்டு ஆணைக்குழு குறித்த உரிமத்தை மேலும் குறிப்பிட்ட காலத்திற்கு புதுப்பிக்கும். இவ்வாறு புதுப்பித்தலுக்கான கோரிக்கையானது ஆணைக்குழுவினால் முன்மொழிந்துள்ள விண்ணப்பப் படிவத்தினூடாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  8. அரசாங்கத்தில் பதிவுசெய்துள்ள ஒரு நிறுவனத்திற்கு வானொலி தொடர்பாடல் நுட்பங்களுடன் தொடர்புடைய கருவிகள், வானொலி ஆய்வு அல்லது ஆராய்ச்சி அல்லது பயிற்சி பெற்ற நபர்கள் இருந்தால் அமெச்சூர் வானொலி சேவையில் ஒரு வானொலி சேவையை இயக்குவதற்காக கீழே குறிப்பிடுகின்ற நிபந்தனைகளுக்கேற்ப உரிமம் வழங்கப்படும்.
    1. குறித்த நிறுவனமானது அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கற்பித்தல் நிலையம் என்றும் மேலே கூறப்பட்ட விடயங்களுடன் உடன்படுகின்ற நல்லெண்ணத்துடன் செயற்படும் ஒரு நிறுவனம் என்றும் ஆணைக்குழு திருப்திப்படுதல்.
    2. நிறுவனத்தினால் நிமிக்கப்பட்ட மற்றும் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நபரே உபகரணங்களின் பாதுகாப்பிற்கும் நிலையத்தின் சிறந்த இயக்கத்திற்கும் பொறுப்பாக இருக்க வேண்டும்.
    3. குறித்த உரிமம் அல்லது நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தின் நிபந்தனைகளுக்குட்பட்டு மேலே குறிப்பிட்ட விதிமுறைகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள தற்போதைய அமெச்சூர் வானொலி உரிமத்தை வைத்திருப்பவரால் அல்லது அவரின் பிரச்சன்னத்திலேயே குறித்த நிறுவனம் இயங்க வேண்டும். இந்த பந்தியின் நோக்கத்திற்காக நிறுவனம் எனும் பதம் பாடசாலை, கல்லூரி, நிலையம் அல்லது அமைப்பு என்பவற்றையும் உள்ளடக்கும்.
    1. வலுவேற்றிÆபெயர்ப்பி அல்லது ஒளிவழிகாட்டிப் பொருத்தல்களை இயக்குவதற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ள அமைப்புக்களுக்கு ஆணைக்குழு அனுமதி வழங்கும்.
    2. அமெச்சூர் வானொலி நிலையத்தை இயக்குவதற்கான உரிமத்தை தம்வம் வைத்திருக்கும் நபருக்கு பந்தியில் அங்கீகரிக்கப்பட்ட வலுவேற்றிÆபெயர்ப்பி அல்லது ஒளிவழிகாட்டி தொடர்பாடல்களை தடையின்றி பெறக்கூடியதாக இருக்கும்.
    3. ஏதேனும் உபகரணங்கள் ஏனைய தொடர்பாடல் சேவைகள் அல்லது நிலையங்களின் இடையூறுக்கு காரணமாக இருந்தால், அத்தகைய உபகரணத்தின் இயக்கத்தை நிறுத்துமாறு ஆணைக்குழு பணிப்புரை விடுக்கும்.
  9. அட்டவணையில் விபரித்துள்ள வானொலி அதிரவெண்கள் அமெச்சூர் வானொலி நொவிஸ்Æ சாதாரண மற்றும் உயர் பயன்பாட்டுக்காக ஆணைக்குழுவினால் ஒதுக்கப்பட்டுள்ளனவாகும். சர்வதேச தொலைத்தொடர்புகள் சங்கத்திற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள சர்வதேச கடப்பாடுகளுடன் வழிநின்றி ஆணைக்குழு இந்த ஒதுக்கீடுகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தும்.

வியாக்கியானங்கள்:

ஆணைக்குழு எனும் பதம், 1996 ஆம் ஆண்டு 27 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்புகள் (திருத்த) சட்டத்தின் மூலம் நிறுவப்பட்ட “இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு” என்பதை குறிப்பீடு செய்கின்றது. சட்டம் என்பது, 1996 ஆம் ஆண்டு 27 ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்ட 1991 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க சட்டத்தினையே குறிப்பீடு செய்கின்றது.

அட்டவணை

  1. நொவிஸ் வகைக்கான வானொலி அதிர்வெண் ஒதுக்கீடுகள்

    வெளிவிடுதல்களின் அதிர்வெண் அலைப்பட்டை நிலை வகுப்பு
    3500 – 3600 KHz . . P . . A1A, A1B, A2A, FIA
    21125 – 21200 KHz . . Pex . . A1A, A1B, A2A
    F1B, J2A, J2B, J3E
    28.0 – 28.500 MHz . . Pex . . A1A, A1B, A1C, A1D
    144 – 146 MHz . . Pex . . F3E, FEF, F2A
    A1A, A1B, A2
    P – ஆரம்பநிலை சேவை .
    S – இடைநிலை சேவை
    Pex – அமெச்சூர் வானொலி சேவையினால் மாத்திரம் பிரத்தியேகமாக பயன்படுத்தப்பட்டது

  2. ஆ சாதாரண மற்றும் உயர்மட்ட வகைகளுக்கான வானொலி அதிர்வெண் ஒதுக்கீடுகள்

    வெளிவிடுதல்களின் அதிர்வெண் அலைப்பட்டை நிலை வகுப்பு
    1800 – 2000 KHz . . P . . A1A, J3E
    3500 – 3900 KHz . . P . . A1A, A1B, A1C, A1D, A2A
    7000 – 7100 KHz . . Pex . . A2B,
    A2C, A2D, A3C, A3E
    10100 – 10150 KHz . . S . . J2A, J2B, J2C, J2D, J3C
    14000 –14350 KHz . . Pex . . J3E, J3F, R3E, F1A, F1B
    18068 – 18168 KHz .. Pex . .F1C, F2A, F2C, F2D, F3C
    21000 – 21450 KHz . . Pex . . F3E, F3F
    24890 – 24990 KHz . . Pex . .

     
    28 – 29.7 MHz . . Pex . .
    50 – 54 MHz . . Pex . . A1A, A1B, A1C, A1D, A2A
    144 – 146 MHz . . Pex . . A2B, A2C, A2D, A3C, A3E
    J2B, J2C, J3C, J3E, J3F
    R3E, F1A, F1B, F1C,F1D
    F2A, A2B, F2C, F2D, F3C
    F3E, F3F
     

    430 – 440 MHz . . S . . A1A, A1B, A1C, A1D
    1240 – 1300 MHz . . S . . A2A, A2B, A2D, A3C, A3E
    2300 – 2450 MHz . . S . . A3F, J2A, J2B, J2C
    3300 – 3400 MHz . . S . . J2D
    CSF
    5650 – 5850 MHz . . S . . J3E, J3E, J3F
    R3E
    10.00 – 10.50 GHz . . S . . F1A, F1B, F1C
    24 – 24.05 GHz . . Pex . . F1D
    24.05 – 24.25 GHz . . S . . F2A, F2B, F2C
    F2D
    47 –47.2 GHz . . Pex . . F3C, F3E
    75.5 – 76 GHz . . Pex . . F3F
    76 – 81 GHz . . S . .
    142 –144 GHz . . Pex . .
    144 – 149 GHz . . S . .
    241 – 248 GHz . . S . .
    248 – 250 GHz . . Pex . .


    P – ஆரம்பநிலை சேவை
    S – இடைநிலை சேவை
    Pex – அமெச்சூர் வானொலி சேவையினால் மாத்திரம் பிரத்தியேகமாக பயன்படுத்தப்பட்டது

Call sign பட்டியல்