இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு


செல்லிடப் பேசி சேவைகள்

இலங்கையில் செல்லிடத் தொலைபேசிச் சேவைகள் 1989 ஆம் ஆண்டு முதலாவது தலைமுறை (1G) அனலாக் வலைப்பின்னலாக (Analog network) துவங்கியது. அது 900 MHz பட்டையில் மொத்த அணுகல் தொடர்பாடல் முறைமை (TACS) தராதரத்தினை அடிப்படையாக கொண்டிருந்தது. பின்னர், 1990 களின் ஆரம்பத்தில் மேம்படுத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசி முறைமையின் (AMPS) தராதரத்தின் அடிப்படையில் 800MHz அலைப்பட்டையில் அனலாக் (ஒப்புமை) செல்லிட சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஒப்புமை முறைமைகளின் வரையறைகள விஞ்சும் விதத்தில் கையடக்கத் தொலைபேசித் தொடர்பாடலுக்கான உலகளாவிய முறைமையான (GSM) இரண்டாவது தலைமுறை (2G) டிஜிட்டல் முறைமை 1990 களில் அறிமுகப்படுத்தப்பட்டது. GSM க்கான முதலாவது அலைக்கற்றை ஒதுக்கீடு 900MHz அலைப்பட்டையிலேலே இருந்தது.
2G கையடக்கத் தெலைபேசி வலைப்பின்னல்களில் குரல் மற்றும் குறைந்த வேகத்திலான டேடா (9.6kbps) பரிமாற்றங்கள் மாத்திரமே சாத்தியமானது. அதேவேளை, GPRS போன்ற 2.5G சேவைகள் சந்தையின் கேள்விகளை பூர்த்திசெய்யும் விதத்தில் 15kbps வேக பரிமாற்றத்தை வழங்கக்கூடியதாக இருந்தன.
வீடியோ அழைப்புக்கள், அதிவேக இணைய அணுகல் போன்ற அதிவேக சேவைகளுக்கான வாடிக்கையாளர் கேள்விகள் 2 Mbps வரையான வேகத்தில் டேடாக்களை வழங்கும் மூன்றாம் தலைமுறை (3G) முறைமைகள் மூலம் பூர்த்திசெய்யப்பட்டதுடன், அதன் மூலம் பல்லூடக சேவைகள் மேம்படுத்தப்பட்டதுடன் அதிக தெளிவுடன்கூடிய காணொளிச் சேவைகளையும் வழங்கக்கூடியதாக இருந்தது.
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு, 3G முறைமையை வைத்திருக்கும் பயனாளர்களின் குறிப்பிடத்தக்க நலன்களைக் கருத்திற்கொண்டு பொருத்தமான நேரத்தில் 3G கைடக்கத் தொலைபேசிச் சேவைகளை அறிமுகப்படுத்தி தென்னாசியாவிலேயே 3G சேவைகளை வழங்கும் முதலாவது நிறுவனம் என்ற பெருமையை சேர்த்துக்கொண்டது. அதேபோன்று, வளர்ந்துவரும் தொழிநுட்ப முன்னேற்றத்திற்கு ஈடுகொடுக்கும் விதத்தில் 3G இன் இடத்திற்கு அதிவேக பொதி அணுகல் (HSPA) எனும் 3.5G முறைமைகளை அறிமுகப்படுத்தி தென்னாசியாவிலேயே 3.5G சேவைகளை வழங்கும் முதன்மை நிறுவனம் என்ற பெருமையையும் சேர்த்துக்கொண்டுள்ளது.
இலங்கை 2013 ஆம் ஆண்டில் 4G தொழிநுட்பத்தினை அறிமுகப்படுத்தியது.

 

உரிமத்தைப் புதுப்பித்தல்

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஏனைய கையடக்கத் தொலைபேசி சாதனங்களுக்கான அங்கீகாரம்Æ இறக்குமதி

ஒரே இயக்குநரால் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள மீள் ஒதுக்கீட்டிற்கு அங்கீகாரம் வழங்குவதற்கான நிபந்தனைகள்