இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு


“கிராமத்திற்கு தொடர்பாடல்” (இலங்கையை இணைத்தல்) திட்டம்

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) நாடு தழுவிய 100% 4G/ பைபர் புரோட்பேண்ட் சேவையை வழங்குவதற்காக “கிராமத்திற்கு தொடர்பாடல்” (இலங்கையை இணைத்தல்) திட்டத்தை ஆரம்பித்தது.

சுபீட்சத்தின் நோக்கு அரசாங்கத்தின் தொலைநோக்கின் மூலம் டிஜிட்டல் முறையில் செயல்படுத்தப்பட்ட அரசாங்கம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நாட்டை இயக்குவதில் டிஜிட்டல் மாற்றம் மற்றும் தொழில்நுட்பத்தை தழுவுதல் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்படுவதால், நாட்டின் டிஜிட்டல் மயமாக்கலுக்கான அடிப்படை உள்கட்டமைப்பு அவசியமானதாகும். கட்டுப்படியான விலையில் கவனம் செலுத்தி நாடு முழுவதும் உள்ள புரோட்பேண்ட் இணைய சேவை குடிமக்களுக்கு உலகளாவிய அணுகலை வழங்குவதை உறுதி செய்வதில் ஒரு முக்கிய வெற்றிக் காரணியாக இருக்கும்.

2019 ஆம் ஆண்டு தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) ஆல் ஆரம்பிக்கப்பட்ட கிராமத்திற்கு தொடர்பாடல் திட்டம் புரோட்பேண்ட் இணைப்பு பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் தற்போது நடைபெற்று வருவதுடன், பூர்வாங்க பணிகள் 25 மாவட்டங்கள் மற்றும் 14,000 க்கும் மேற்பட்ட கிராமசேவை நிர்வாகப் பகுதிகள் ஆகியவற்றில் ஒரு ஆண்டு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் உண்மையான சேவை வசதிகள் பற்றிய அடிப்படை உண்மைகளை புரிந்துகொள்வதில் முடிவடைந்தது.

இந்தத் திட்டத்தின் கீழ், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) தொலைத்தொடர்பு செயற்படுத்துனர்களுக்கு தொலைத்தொடர்பு அபிவிருத்திக் கட்டண (TDC) நிதி மூலம் அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு 4G/பைபர் புரோட்பேண்ட் சேவையை அடைய பண உதவி வழங்குகிறது. மேலும், கிராமிய சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதுடன், கடைசி மைல் இணைப்பை மையமாகக் கொண்டு, அதிவேக, கட்டுப்படியான மற்றும் நிலையான 4G/பைபர் புரோட்பேண்ட் வலையமைப்பை உருவாக்கி மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) ஆனது இரத்தினபுரி, குருநாகல், மாத்தறை, அநுராதபுரம், கண்டி, பதுளை களுத்துறை, கேகாலை, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை உள்ளிட்ட பத்து மாவட்டங்களில் 4G/ பைபர் புரோட்பேண்ட் சேவைத் திட்டத்தின் முதல் கட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்தியது. "கிராமத்திற்கு தொடர்பாடல்" திட்டத்தின் கீழ் 4G சேவையை வழங்க சுமார் 276 புதிய தொலைத்தொடர்பு கோபுர தளங்கள் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, இரத்தினபுரி, குருநாகல், பதுளை களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் 57 கோபுரத் தளங்கள் ஏற்கனவே செயற்பாட்டாளர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் செயற்படுத்துனர்கள் புதிய கோபுரங்களைக் கட்ட திட்டமிட்டுள்ளதுடன், மீதமுள்ள பகுதிகள் மற்றும் எஞ்சிய நிலங்களை கையகப்படுத்தி சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

 

கீழேயுள்ள அட்டவணை தொலைத்தொடர்பு கோபுர நிர்மாணப் பணிகளின் முன்னேற்றச் சுருக்கத்தைக் காட்டுகிறது.
கிராமத்திற்கு தொடர்பாடல் நிகழ்ச்சித்திட்டம் - 2024.01.01 அன்று உள்ளவாறு சுருக்கம்

  மொத்த கோபுரங்கள் நிலத்தை அடையாளம் காணும் செயன்முறை அதிகாரசபை அங்கீகாரங்கள் செயலாக்கம் முன்னெடுக்கப்படும் நிர்மாணம் (WIP) சேவையில்
இரத்தினபுரி 35  - 2 2 31
குருணாகல் 35  - 9 5 21
மாத்தறை 21 4 10 7 1
கண்டி 33 20 10 3  -
அநுராதபுரம் 31 10 18 3  -
பதுளை 34 24 9  - 1
களுத்துறை 34 8 19 6 1
கேகாலை 34 16 8 8 2
யாழ்ப்பாணம் 11 8 3  -  -
திருகோணமலை 8 8  -  -  -
  276 98 88 34 57

2023 ஆம் ஆண்டில், இரத்தினபுரி மாவட்டத்தில் மூன்று கோபுரங்களும், குருநாகல் மாவட்டத்தில் பதினொரு கோபுரங்களும், பதுளையில் ஒரு கோபுரமும் சேவையில் ஈடுபடுத்தப்பப்படுகின்றன. மேலும், கேகாலை மாவட்டத்தில் இரண்டு கோபுரங்களும் களுத்துறை மாவட்டத்தில் ஒரு கோபுரமும் கிராமிய சமூகங்களின் அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக தற்காலிகமாகச் செயற்படுகின்றன.

2022 ஆம் ஆண்டில் நாடு எதிர்கொண்ட விரும்பத்தகாத பொருளாதார நிலைமை காரணமாக, தொலைத்தொடர்பு உபகரணங்கள் மற்றும் கட்டுமான செலவுகள் அதிகரித்தன. கோபுர நிர்மாணப் பணிகளின் விலை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு தளத்திற்கும் TDC வழங்குவதை 27.4 மில்லியன் வரை அதிகரிக்க ஆணைக்குழு முடிவு செய்தது. மேலும், "கிராமத்திற்கு தொடர்பாடல் " திட்டத்தின் கீழ் கோபுர நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக வழிகாட்டுதல்கள் திருத்தப்பட்டன.