இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு


அமைந்தொழுகுந்தன்மை

தொலைத்தொடர்பு தொழிற்துறையில் நடைபெற்று வரும் பன்முக தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, சந்தை இடத்தின் நிலைமைகளைப் பொறுத்து தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் மாறுபடுகிறது. பயனுள்ள ஒழுங்குபடுத்தல் சட்டகமானது நுகர்வோர் பாதுகாப்பு, பிணக்குத் தீர்வு மற்றும் அமுலாக்கம் போன்ற செயற்பாட்டு அம்சங்களை உள்ளடக்கியது. தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் (TRCSL) இணக்கப் பிரிவு அதன் செயற்பாடுகள் மூலம், தொலைத்தொடர்புத் துறையின் அபிவிருத்தி மற்றும் அதிகரித்த நுகர்வோர் நலனுக்கான சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தொலைத்தொடர்பு வழங்குநர்கள் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்கி செயற்படுவதை ஒழுங்குபடுத்துநர் உறுதி செய்யும் செயல்முறையானது இணக்கம் மற்றும் அமுலாக்கம் எனப்படும். 1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க திருத்தப்பட்ட இலங்கை தொலைத்தொடர்புச் சட்டத்தின் கீழ் இதனை வெற்றிகரமான நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு (TRCSL) அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தல் இணங்கியொழுகும் செயற்பாடு கீழே குறிப்பிடுகின்ற பகுதிகளில் தொழிற்படுகின்றது.

கண்காணிப்பு

இலங்கையில் நம்பகமான மற்றும் திறமையான தேசிய மற்றும் சர்வதேச தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவதை உறுதி செய்வதே தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் (TRCSL) முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். இந்த நோக்கத்திற்காக, நம்பகமான, திறமையான மற்றும் தரமான தொலைத்தொடர்பு சேவையை வழங்குவதற்கு தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் தங்கள் ஒழுங்குபடுத்தல் கடப்பாடுகளுக்கு இணங்குவதை உறுதிசெய்ய ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதற்கு தொடர்ச்சியான தொழில்துறை கண்காணிப்பு மற்றும் பொருத்தமான ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகளை செயற்படுத்துவது அவசியம். இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் (TRCSL) இணக்கப் பிரிவின் கண்காணிப்புப் பிரிவினால் இந்தப் பொறுப்புகள் நிறைவேற்றப்படுகின்றன.

சேவைத் தரம்

QOS விதிகள்

பெறுமதி சேர் சேவைகளுக்கான வழிகாட்டுதல்கள்

உரிமம் பெற்ற செல்லிட மற்றும் நிலையான தொலைபேசி இயக்குநர்களால் வழங்கப்படும் பெறுமதி சேர்க்கப்பட்ட தொலைத்தொடர்பு சேவைகளுக்கான அதிவிசேட வர்த்தமானி
ஆங்கிலம் / சிங்களம் / தமிழ்

இயக்குநர் ஊக்குவிப்பு செய்திகளுக்கான இயக்குநர் சுய-ஆளுகைக் கொள்கை. வெளி நோக்கிய அழைப்பாளர் (OBD) அழைப்புகள் ("கொள்கை")

ஆவணத்தை பார்வையிட