இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு


கிளவுட் கம்ப்யூட்டிங் குறித்த மூன்று நாள் கருத்தரங்கு ஆரம்பமானது

கிளவுட் கம்ப்யூட்டிங் குறித்த மூன்று நாள் கருத்தரங்கு ஜூலை 28 முதல் 30 வரை நடைபெறுகிறது
 
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRCSL) மற்றும் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU) ஏற்பாடு செய்த கிளவுட் கம்ப்யூட்டிங் குறித்த மூன்று நாள் கருத்தரங்கு இன்று (ஜூலை 28) காலை ஹோட்டல் தாஜ் சமுத்ராவில் ஆரம்பமாகிறது.
 
கலாநிதி சையத் இஸ்மாயில் ஷா, பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் தலைவர், சர்வதேச தொலைத்தொடர்புகள் ஒன்றிய ஆசிய பசுபிக் பிராந்திய அலுவலகத்தின் சிரேஷ்ட ஆலோசகர் சமீர் சர்மா, பிரான்ஸ் டெலிகொம் ஒரேன்ஜின் கலாநிதி ருவென் ஹே யோகேஷ் ஜியாண்டானி, CTO, GSP இந்தியா மற்றும் சார்க் ஆகியோர் இந்நிகழ்வில் உரையாற்றவுள்ளனர்.
 
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் கருத்தரங்கை அங்குரார்ப்பணம் செய்து வைப்பார், அதைத் தொடர்ந்து கருத்தரங்கின் சிறப்புரையை ITU, சிரேஷ்ட ஆலோசகர் திரு. சமீர் சர்மா நிகழ்த்துவார்.
 
ஒரு புதிய தொழில்நுட்பம் என்ற வகையில் கிளவுட் கம்ப்யூட்டிங் , ஸ்மார்ட் நகர அபிவிருத்தி, பேருந்து வழித்தடங்களை மேம்படுத்துதல், நேர அட்டவணை, போக்குவரத்து சமிக்ஞை முறைமைகள், மருத்துவ ஆராய்ச்சிக்கான தரவு, பயிர் விலையை அணுகுதல், விவசாய நிபுணர்களுடன் விவசாயிகள் இணைப்பு, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் தொடர்புடைய ஒழுங்குமுறை சிக்கல்கள் ஆகியவை கலந்துரையாடப்படும் விடயத்துறைகளில் அடங்கும்.
 
தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (TRCSL) உயர் அதிகாரிகள் ஜூலை 28 முதல் 30 வரை இந்த கருத்தரங்கில் பங்கேற்பார்கள். திரு. மொஹான் ஜயசேகர, கொள்கை மற்றும் சர்வதேச உறவுகள் மற்றும் உரிம நிர்வாகத்தின் பணிப்பாளர் இந்த நிகழ்வை ஒருங்கிணைக்கிறார்.

more