இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு


மலேசியாவின் கோலாலம்பூரில் 5வது ITU ஆசிய-பசிபிக் ஒழுங்குபடுத்துனர்கள் வட்டமேசை மாநாடு

சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU) மற்றும் மலேசிய தொடர்பாடல்கள் மற்றும் மல்டி மீடியா ஆணைக்குழு இணைந்து 5வது ITU-ஆசியா பசிபிக் ஒழுங்குபடுத்தல் வட்டமேசை மாநாட்டை மலேசியாதிகதிகளில் நடத்தியது.
 
இந்த ஒழுங்குபடுத்துனர் வட்டமேசை மாநாட்டில் ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 18 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் நாயகங்கள் கலந்து கொண்டனர். இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பிரதிநிதியாக பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. எம்.எம். சுஹைர் கலந்துகொண்டார்
 
தொடக்க அமர்வின் முடிவில் உத்தீயோகபூர்வ புகைப்படத்திற்காக பங்கேற்பாளர்கள் தோற்றுவதை படம் காட்டுகிறது.
 
இந்த வட்டமேசை மாநாட்டின் கருப்பொருள் "டிஜிட்டல் பொருளாதாரத்தில் தொலைத்தொடர்பு/தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப ஒழுங்குபடுத்தல் சவால்களை எதிர்கொள்ளுதல்"