கொக்காவிலில் உள்ள பரிமாற்ற மையம்
கொக்காவில் பல செயற்பாட்டு பரிமாற்ற மைய திறப்பு
தொலைத்தொடர்பு, தொலைக்காட்சி, வானொலி மற்றும் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப சேவைகள் இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கு இன்றியமையாத வளங்களாக அமைகின்றன, மேலும் அவை நாட்டின் முன்னேற்றத்திற்கு நன்கு பயன்படுத்தப்பட வேண்டும். தேசிய மற்றும் சர்வதேச தொலைத்தொடர்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான தொலைத்தொடர்பு வலையமைப்பின் சரியான மற்றும் வினைத்திறனான செயற்பாடு தொலைத்தொடர்பு செயற்படுத்துனர்களுக்கு அதிக நன்மைகளை ஏற்படுத்தும்.
தொலைத்தொடர்பு தரப்புகள் மற்றும் வாடிக்கையாளர்கள்.
ஆசிய தொலைத்தொடர்பு வலையமைப்புகளுக்கான ஒரு பிராந்திய மையமாக இலங்கையை தாபிப்பது மஹிந்த சிந்தனையின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். கொக்காவில் பல செயற்பாட்டு பரிமாற்ற மைய நிர்மாணம்
இந்த இலக்கை அடைவதற்கான பாதையில் பரிமாற்ற மைய கோபுரம் ஒரு முக்கியமான மைற்கல்லாகும்.
தொலைத்தொடர்பு வலையமைப்புக் கொள்கைகள் மற்றும் இந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறை விதிகள் ஆகியவை நிபுணர்கள் குழுவினால் வரையப்பட்டு அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டது. தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL), மத்திய சுற்றாடல் அதிகாரசபை, நகர அபிவிருத்தி அதிகாரசபை, பாதுகாப்பு அமைச்சு, பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், மொரட்டுவ பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம், சுகாதார அமைச்சு, வளிமண்டலவியல் திணைக்களம் இலங்கை மின்சார சபை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை ஆகியவற்றிலிருந்து இந்தக் குழுவின் அங்கத்துவம் பெறப்பட்டது.
நாட்டில் தொலைத்தொடர்பு வலையமைப்புகளின் விரிவாக்கம் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் (TRCSL) உரிமம் பெற்ற PSTN செயற்படுத்துனர்களால் மேற்கொள்ளப்படுகிறது. 2005 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் தொலைத்தொடர்பு வலையமைப்புகளின் வளர்ச்சியை பின்வரும் அட்டவணை விளக்குகிறது.
Year | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 |
Proposed Towers | 313 | 501 | 973 | 2010 | 1110 | 938 | 422 |
இந்தப் பகுதிகளில் (2010-2011) தொலைத்தொடர்பு வலையமைப்பு உள்கட்டமைப்பின் முன்மொழியப்பட்ட அபிவிருத்தி மற்றும் விரிவாக்கத்திற்கு ஏற்ப வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மாவட்டங்களில் நிறுவப்படும் தொலைத்தொடர்பு மையங்களின் எண்ணிக்கையை பின்வரும் அட்டவணை குறிப்பிடுகிறது:
Ampara | 53 | Batticaloa | 34 | Mullaitivu | 04 | Trincomalee | 48 |
Mannar | 29 | Jaffna | 103 | Vavuniya | 33 | Kilinochchi | 14 |
இந்த கொக்காவில் பரிமாற்ற கோபுரம் கடந்த காலங்களில் பிரதேசத்தில் உள்ள மக்களின் வானொலி ஒலிபரப்புத் தேவைகளுக்காகவும், வட மாகாணத்தில் சேவையாற்றும் பாதுகாப்புப் படையினரின் தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டது. இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான நடவடிக்கைகளின் போது, அரசாங்கப் படையினர் கோபுரத்தை மீட்டனர். புனரமைக்கப்பட்ட இந்த கோபுரம் இன்று மேன்மைதங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளது.
இலங்கையின் மிகப்பெரிய மற்றும் மிக உயரமான ஒலிபரப்புக் கோபுரமான கொக்காவில் கோபுரம் 174 மீட்டர் உயரம் கொண்டது. வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் ரூ.330 மில்லியன் செலவில் இது புனரமைக்கப்பட்டது. இந்த கோபுரம் தெற்காசியாவிலேயே மிக உயரமான தன்னியக்க பரிமாற்ற கோபுரம் என்று நிபுணர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இந்த கோபுரத்தின் இடம் தொலைத்தொடர்பு, தொலைக்காட்சி, வானொலி மற்றும் ஏனைய அரச நிறுவன வசதிகளை நிறுவ பயன்படுத்தப்பட உள்ளது. வட மாகாணத்தில் உள்ள சமூகங்களைப் பாதிக்கும் தொலைத்தொடர்பு, தொலைக்காட்சி, வானொலி மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பங்களில் தலையிடுவது தொடர்பான பிரச்சனைகளை நீக்குவதற்கு இந்த பல-செயற்பாட்டு ஒலிபரப்பு கோபுரம் உதவியாக இருக்கும். இந்த கோபுரம் அரச மற்றும் தனியார் ஊடகங்கள் மற்றும் தொலைத்தொடர்பு அலைவரிசைகளின் பயன்பாட்டிற்கு போதுமான இடவசதி மற்றும் வசதிகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மற்றும் வெகுஜன ஊடகம் மற்றும் தகவல் அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், மத்திய பொறியியல் ஆலோசனைப் பணியகத்தின் முக்கிய பங்கைக் கொண்டு, வடக்கின் வசந்தம் திட்டத்தின் அனுசரணையின் கீழ், இந்த கொக்காவில் பல-செயற்பாட்டு ஒலிபரப்புக் கோபுரம் புனரமைக்கப்பட்டது.
இந்த கோபுரத்தை புனரமைப்பதில் பெறுமதியான பங்களிப்புகளையும் சேவைகளையும் வழங்கியமைக்காக இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு, வடக்கின் வசந்தம் செயற்குழுவின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான கௌரவ. பசில் ராஜபக்ஷ, வெகுஜன ஊடகம் மற்றும் தகவல் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சுடன் இணைக்கப்பட்டுள்ள பல்வேறு நிறுவனங்கள், பாதுகாப்பு அமைச்சு, இலங்கை இராணுவம் மற்றும் அதன் சமிக்ஞைப் பிரிவுக்கு அதன் நன்றியை தெரிவிக்கின்றது.
தொலைக்காட்சி, வானொலி ஒலிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் வடக்கை நோக்கி
தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) வடக்கின் வசந்தம் நிகழ்ச்சித் திட்டத்துடன் வடக்கிற்கு - கொக்காவிலில் உள்ள பரிமாற்ற மையம்
"வடக்கின் வசந்தம்" திட்டத்தின் கீழ் வடக்கில் வசிப்பவர்களுக்கு தொலைக்காட்சி, வானொலி ஒலிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு வசதிகளை விரிவுபடுத்துவதற்காக தொலைத்தொடர்பு தொடர்பான உட்கட்டமைப்புகளை வழங்குவதில் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) முன்னணி இடத்தை வகிக்கின்றது. கொக்காவில் கோபுர திட்டம் இது போன்ற முதல் திட்டமாகும் என்பதுடன் இன்னும் சில நுண்ணலை இணைப்பு வசதிக்காக வர உள்ளது.
மேற்படி திட்டத்திற்காக ஆரம்பத்தில் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) ரூபா 150 மில்லியனை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், வெகுஜன ஊடக அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஒருங்கிணைப்புடன் 180 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் இது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (TRCSL) பணிப்பாளர் நாயகம் திரு. பிரியந்த காரியப்பெரும தெரிவித்தார்.
இந்த செயற்திட்டம் 2009 ஆகஸ்ட் 19 ஆம் திகதி வெகுஜன ஊடகம் மற்றும் தகவல் அமைச்சர் கௌரவ திரு அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் மேன்மைதங்கிய ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ ஆகியோரின் பங்கேற்புடன் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு, வெகுஜன ஊடகம் மற்றும் தகவல் அமைச்சு, இலங்கை இராணுவம் மற்றும் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.
தொலைக்காட்சி, ஒலிபரப்பு மற்றும் ஏனைய தொடர்பாடல் சேவைகளை வழங்குவதற்கு அல்லது விஸ்தரிப்பதற்கு வசதியாக, மூலோபாய இடங்களில் உயரமான தொடர்பாடல் கோபுரங்கள் கிடைப்பது இன்றியமையாதது என பிரியந்த காரியப்பெரும மேலும் விளக்கினார். பொதுமக்கள் தங்கள் விருப்பப்படி ஊடகங்களுக்கான அணுகலை வழங்குவது அரசாங்கத்தின் உயர் முன்னுரிமையாகும். இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (TRCSL) அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களின் (Telcos) திட்டங்களை வெளியிடுவதற்கான உள்கட்டமைப்பை நிறுவுவதற்கு உதவுதல். தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) தொலைகாட்சி, ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவைகளை வழங்குவதற்காக உயரமான கோபுரங்களை அமைப்பதற்கான அங்கீகாரத்திற்கான தேவைகளை புறக்கணிக்க முடியாது. சிக்கனமான முறையில் பரந்த சாத்தியமான சேவையைப் பெற, மூலோபாய இடங்களில் இவற்றைக் அமைப்பது அவசியம். ஆன்டெனா கட்டமைப்புகள் குறித்த முன்மொழியப்பட்ட தேசியக் கொள்கையில் உள்கட்டமைப்புப் பகிர்வு முதன்மையானதாக இருப்பதால், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) இந்த வகையான கோபுரங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கட்டுமானத்தை முழுமைப் பணி அடிப்படையில் செய்ய மத்திய பொறியியல் ஆலோசனை பணியகம் (CECB) நியமிக்கப்பட்டுள்ளது.