வலு குறைந்த சாதனம்
இணையத்தளப் பொருட்களின் சேவைகளுக்கான வலு குறைந்த விரிபரப்பு இணையங்களுக்கான அலைக்கற்றை ஒதுக்கீடு
இல. | விண்ணப்பம் / தொழிநுட்பம் | அதிர்வெண் பட்டை | அலைவரிசை திட்டம் | அதிகபட்ச EIRP |
1. | இணையத்தளப் பொருட்களின் சேவைகளுக்கான வலு குறைந்த விரிபரப்பு இணையங்கள் | 920- 925 MHz | AS923 | 23 dBm (200 mW) |
2. | இணையத்தளப் பொருட்களின் சேவைகளுக்கான வலு குறைந்த விரிபரப்பு இணையங்கள் | 433.05–434.79 MHz | EU433 | |
3. | இணையத்தளப் பொருட்களின் சேவைகளுக்கான வலு குறைந்த விரிபரப்பு இணையங்கள் | 863–868 MHz | EU863-870 |
விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்க
வகை அங்கீகார செயன்முறை
1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க திருத்தப்பட்ட இலங்கை தொலைத்தொடர்புகள் சட்டத்தின் 5(ச), 5(ட) மற்றும் 5(ய) ஆம் பிரிவுகளுக்கு அமைவாக இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவானது;
- தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவதற்கான தொழிநுட்ப தராதரங்கள் மற்றும் செயன்முறைகளை குறித்துரைக்கவும்,
- ஒரு தொலைத்தொடர்பு முறைமைக்கு தொடர்புபடுத்துகின்ற தொலைத்தொடர்புக் கருவிகளின் வகைகளை அங்கீகரிக்கவும்,
- மின்சார உபகரணங்கள் மற்றும் அங்கீகாரமற்ற வானொலி அதிர்வெண் வெளியிடுதல்களால் உருவாகும் மின்காந்தக் கோளாறுகளை குறைப்பதற்கான விதிமுறைகளுடன் இணங்கியொழுக வேண்டுமென வலியுறுத்தவும் நியதிச்சட்ட கடப்பாட்டினைக் கொண்டுள்ளது.
இலங்கையில் பயன்படுத்தவுள்ள வானொலி மற்றும் தொலைத்தொடர்பு முனைய உபகரணங்கள் (RTTE) அவற்றின் இசைவுடைமை மற்றும் பாதுகாப்பிற்காக தேசிய மற்றும் சர்வதேச ஒழுங்குபடுத்தல் தாரதரங்கள் மற்றும் தேவைப்பாடுகளுடன் இணக்கமாக இருப்பது அவசியம்.
வானொலி மற்றும் தொலைத்தொடர்பு முனைய உபகரணங்கள் பொருத்தமான தேசிய மற்றும் சர்வதேச தராதரங்களுடன் இணக்கமாக இருப்பதை வகை அங்கீகாரம் உறுதிப்படுத்துவதுடன், வகை அங்கீகரிக்கப்பட்ட வானொலி மற்றும் தொலைத்தொடர்பு முனைய உபகரணங்கள் ஏனைய தொலைத்தொடர்பு முறைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துவதற்கோ அல்லது வாடிக்கையாளர்களுக்கு சுகாதார ரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்தவோ காரணமாக இருத்தலாகாது.
வானொலி மற்றும் தொலைத்தொடர்பு முனைய உபகரணங்களின் (RTTE) வகை அங்கீகாரம் பற்றிய மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள தயவுசெய்து கீழே தரப்பட்டுள்ள இணைப்புக்களை சொடுக்கவும்.
- வானொலி மற்றும் தொலைத்தொடர்பு முனைய உபகரணங்கள் (RTTE) விதிமுறைகள் – ஆங்கிலம்
- வானொலி மற்றும் தொலைத்தொடர்பு முனைய உபகரணங்கள் (RTTE) விதிமுறைகள் – சிங்களம்
- வானொலி மற்றும் தொலைத்தொடர்பு முனைய உபகரணங்களுக்கான (RTTE) வகை அங்கீகாரம் தொடர்பான பதிவேடு – புதியது
- நிலையான வகை அங்கீகாரப் படிவம்
- சாதாரண வகை அங்கீகாரப் படிவம்
- வகை அங்கீகாரத்திற்காக வானொலி மற்றும் தொலைத்தொடர்பு முனைய உபகரணங்களின் மாதிரி(களை) இறக்குமதி செய்வதற்கு அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவம்.
- வகை அங்கீகாரத்திற்காக வானொலி மற்றும் தொலைத்தொடர்பு முனைய உபகரணங்களின் மாதிரி(களை) சுங்கத்திலிருந்து விடுவிப்பதற்கான விண்ணப்பப்படிவம்.
- வர்த்தக நோக்கங்களுக்காக வானொலி மற்றும் தொலைத்தொடர்பு முனைய உபகரணங்களின் சுங்க விடுவிப்பிற்கான விண்ணப்பப்படிவம்.
- வானொலி மற்றும் தொலைத்தொடர்பு முனைய உபகரணங்களை மீண்டும் ஏற்றுமதி செய்வதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவம்.
- வானொலி மற்றும் தொலைத்தொடர்பு முனைய உபகரணங்களை வர்த்தக நோக்கங்களுக்காக/ சொந்தப் பாவனைக்காக இறக்குமதி செய்வதற்கான அனுமதியை கோருவதற்கான விண்ணப்பப்படிவம்.
- இணக்கப் பிரகடனத்தை தயார்செய்வதற்கான வழிகாட்டி (DOC)
டிரோன்களுக்கு அனுமதி வழங்குவதற்கான பாய்வு நிரல்படச் செயன்முறை/ UAVs