வான்வழி சார் சேவைகள்
விபத்து, அவசரநிலை, உயிர் பாதுகாப்பு மற்றும் திசைகாட்டுதல் போன்றன தொடர்பாக சமிக்ஞைகள் அல்லது செய்திகளை வழங்குவதன் மூலம் விமானங்களின் பாதுகாப்பான ஓட்டத்தை உறுதிப்படுத்துவதற்காக விமான நிலையங்களிலும் Aircraft Earth stations எனும் செய்மதி அடிப்படையிலான தொடர்பாடலை வசதிப்படுத்துகின்ற விமானத்தில் நிறுவப்பட்டுள்ள தொடர்பாடல் முறைமைகளிலும் வெவ்வேறு வகையான தொடர்பாடல் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இவ்வாறான தொடர்பாடல் சாதனங்களில் அதிகமானவை சர்வதேச பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் அதிர்வெண்களின் அப்படையில் இயக்கப்படும் அதேவேளை தனிப்பட்ட அதிர்வெண் ஒதுக்கீடு தரையுடன் சம்பந்தப்பட்ட விடயங்களை கையாள்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன.
இவ்வானொலி தொடர்பாடல் உபகரணங்கள் யாவும் நிலையங்களில் இருப்பதுடன் அவற்றை இயக்குவதற்கு செல்லுபடியாகும் உரிமம் தேவைப்படுகின்றது.
விமான நிலையம்
இலங்கையில் பதிவு செய்துள்ள அனைத்து விமானங்களிலும் அதிர்வெண்களைப் பயன்படுத்துவதற்கும் விமானத்தில் அதிர்வெண்களை வெளியிடும் கருவிகளின் பயன்பாட்டிற்காகவும் செல்லுபடியாகும் விமான நிலைய உரிமத்தைப் பெற்றிருப்பது அவசியம்.
பதிவிறக்கம் செய் - 406MHz Becons (ELT) பதிவு செய்தல்
பதிவிறக்கம் செய் - விமான நிலையத்திற்கான விண்ணப்பப்படிவம்
Aeronautical Mobile
வான்வழித் தொடர்பாடல்கள் மற்றும் திசைப்படுத்தலுக்காக பூமியில் நிறுவப்பட்டுள்ள நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து வகையான தொடர்பாடல் சாதனங்களையும் பொருத்தமான அதிர்வெண்களில் இயக்குவதற்கு பொருத்தமான உரிமம் இருப்பது அவசியம்.
இங்கே பதிவிறக்கம் செய்யவும் - விண்ணப்பப் படிவம்