இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு


ஒரு பாடசாலையை இணைத்து, ஒரு சமூகத்தை இணைத்தல் இலங்கையில் ITU/TRC உதவி திட்டம் 2012 / 2013

  • Spotlighting Sri Lanka - ICT (ITU NEWS) உதவியோடு 33 மாகாணப் பாடசாலைகளில் 8500 மாணவர்களை சென்றடைவதற்கான கல்வி
  • இலங்கையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட ஒரு பாடசாலையை இணைத்து, ஒரு சமூகத்தை இணைத்தல் திட்டம் (www.itu.int) (ஊடக வெளியீடு சிங்களம்)
  • ஒரு பாடசாலையை இணைத்து, ஒரு சமூகத்தை இணைத்தல் - (அமைவிட வரைபடம்)
  • பாடசாலை தகவல் தொடர்பாடல் தொழிநுட்பப் பாடத்திட்டத்தின் உள்ளடக்கத்தை உருவாக்க தனியார் நிறுவனம் ITU/TRC திட்டத்திற்கு டொங்கல்ள்களை நன்கொடையாக வழங்குகிறது

    மெட்ரோபாலிட்டன் கம்ப்யூட்டர்ஸ் தனியார் நிறுவனம் கல்வி அமைச்சின் (MOE - ICT) ICT கிளையின் கோரிக்கையின் பேரில், ஒரு பாடசாலையை இணைத்து, ஒரு சமூகத்தை இணைத்தல் 2012' திட்டத்திற்கு உதவுவதற்காக நான்கு (4) டொங்கல்களை சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU) / இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு (TRCSL) வழங்கியுள்ளது.

    இந்த டொங்கல்கள் பாடசாலை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப பாடத்திட்ட உள்ளடக்க திட்டத்தை உருவாக்க பயன்படும். கல்வி அமைச்சின் (MOE - ICT) தகவல் தொடர்பாடல் தொழிநுட்பக் கிளையானது ITU/TRC திட்டம் 2012ன் கீழ்பாடசாலை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப பாடத்திட்ட உள்ளடக்க மேம்பாடு தொடர்பான ஒரு முன்னோடித் திட்டத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.

    இந்த படங்கள் மெட்ரோபொலிடன் கம்ப்யூட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் திரு வஜிர டி சில்வா 2012 ஜூன் 26 அன்று, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) பணிப்பாளர்-நாயகம் திரு. அனுஷ பெல்பிட (இடது) மற்றும் கல்வி அமைச்சின் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பக் கிளையின் அதிகாரி (வலது) ஆகியோரிடம் டொங்கல்களை கையளிப்பதை காட்டுகிறது.