இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு


இலங்கையின் பின்தங்கிய பகுதிகளில் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பப் பயிற்சியை வழங்குவதற்காக கொரிய சர்வதேச ICT தன்னார்வலர்களின் புதிய தொகுதி வருகை

தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) e-NABLE திட்டத்தின் கீழ் சமூக சேவைத் திணைக்களத்தினால் நடத்தப்படும் இரண்டு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2015 ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ICT பயிற்சியை வழங்குவதற்காக NIA -TRCSL திட்டத்தின் கீழ் இரண்டு குழுக்களை உள்ளடக்கிய கொரிய தகவல் தன்னார்வலர்கள் (KIV) 2015 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் திகதி இலங்கை வந்தடைந்தனர்.

தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) ஆனது, World Friends, கொரியாவின் விஞ்ஞான, தகவல் தொழில்நுட்பம் மற்றும் எதிர்கால திட்டமிடல் அமைச்சு மற்றும் கொரியாவின் தேசிய தகவல் சங்க நிறுவனம் (NIA) ஆகியவற்றால் இலங்கையில் விசேட தேவையுடையவர்களின் ICT அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்திற்காக கொரிய IT தன்னார்வலர்களுடன் இணைந்து 2015 திட்டத்தை ஒருங்கிணைக்கிறது. இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு, சமக சேவை திணைக்களத்தினால் மேற்பார்வைசெய்யப்படும் சீதுவ மற்றும் வாவின்ன தொழிற்பயிற்சி நிலையங்களில் (VTCs) TRC e-NABLE திட்டத்தின் கீழ் ICT பயிற்சி பெறும் மாணவர்கள் / IT மையங்களில் உள்ள பணியாளர்கள் / பயிற்றுவிப்பாளர்களுக்கு பயிற்சியளிக்க இந்த கொரிய குழுக்களுக்கு ஏற்பாடுகளை செய்துள்ளது. பயிற்று மொழி ஆங்கிலமாக இருக்கும். தென் கொரியா அரசு, தகவல் தொழில்நுட்பத்தில் (IT) திறமையான கொரிய தன்னார்வலர்களின் குழுக்களை ஆண்டுதோறும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு மேம்பட்ட IT தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்க அனுப்புகிறது.

கொரிய தகவல் தொழிநுட்ப தன்னார்வலர் (KIV) திட்டம் கொரியாவின் விஞ்ஞான, தகவல் தொழிநுட்பம் மற்றும் எதிர்கால திட்டமிடல் அமைச்சினால் நடத்தப்படுவதுடன், 2001 முதல் கொரியாவின் தேசிய தகவல் சங்கம் (NIA) மூலம் நிர்வகிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு NIA-ITU சர்வதேச தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப தன்னார்வத் (IIV) திட்டம் விசேட தேவைகள் / பணியாளர்களுக்கு மனித வள மேம்பாட்டுக்கான தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப பயிற்சியை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு KIIV அணிகள் ஒவ்வொன்றும் கொரிய பல்கலைக்கழகங்களில் இருந்து பெறப்பட்ட நான்கு இளமானி பட்டதாரிகளைக் கொண்டிருக்கும்.

"Just Do IT" குழுவின் உறுப்பினர்கள் திரு. காங் கியூ பார்க் (அணித் தலைவர்), திருமதி. யோன் ஜி கிம் , திருமதி. ஜி யங் கிம், திருமதி. Seo Young Bae ஆகியோர் இதில் இடம்பெறுவதுடன், அவர்கள் ICT பயிற்சி நிகழ்ச்சியை கண்டியில் வாவின்ன, வத்தேகம தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தவுள்ளனர்.
1

படம்1 : "Just Do IT" அணி

படம்2 : "Moebius" அணி

“Moebius” அணி உறுப்பினர்கள் திரு, யங் ஜங் லீ (அணித் தலைவர்), திரு. வூ சாங் யங், திரு. சியோங் யோப் யூ, திருமதி யுன் பெயோய் ஆகியோர் இதில் இடம்பெறுவதுடன், அவர்கள் பயிற்சி நிகழ்ச்சியை சீதுவ தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தவுள்ளனர்.

KIIV ICT திட்டத்தின் பாடத்திட்டத்தில் அடோப் ஃபோட்டோஷாப், HTML5, CSS3, ஜாவா ஸ்கிரிப்ட், PHP, MySQL போன்ற தரவுத்தள மற்றும் வெப் டெவலப்மென்ட் தலைப்புகள் மற்றும் கொரிய கலாச்சாரத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய அறிமுகம் ஆகியவை அடங்கும். கொரிய தன்னார்வத் தொண்டர்களின் இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து, தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் பணியாளர்கள் மற்றும் மாணவர்களிடையே தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப திறன்களின் மேம்பட்ட மேம்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க பயன் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். (KIV) திட்டம் இலங்கையில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைவதற்கு World Friends, கொரியாவின் விஞ்ஞான, தகவல் தொழில்நுட்பம் மற்றும் எதிர்கால திட்டமிடல் அமைச்சு மற்றும் கொரியாவின் தேசிய தகவல் சங்க நிறுவனம் (NIA) மற்றும் ITU ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் கொரிய தகவல் தொடர்பாடல் தொழிநுட்பங்க தன்னார்வலர்களுக்கும், கொரிய IT தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தொடர்ச்சியான உள்ளீட்டிற்காக நாங்கள் நன்றி கூறுகிறோம்.

Jagath/TRCSL/PILD/KIIV/11-July 2015