இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு


அலைக்கற்றை தொடர்பான SATRC செயற்குழு கூட்டம் 2015 மே 27, 28 கொழும்பு, இலங்கை

அலைக்கற்றை தொடர்பான ஆசிய பசிபிக் தொலைத்தொடர்பு (APT) SATRC செயற்குழுவின் கூட்டம் 2015 மே 27 முதல் 28 வரை இலங்கையின் கொழும்பில் நடைபெறும். இந்த சந்திப்பு APT ஆல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் (TRCSL) நடத்தப்படுகிறது.

இந்த கூட்டம் 2014 இல் பூட்டானின் பரோவில் நடந்த SATRC இன் 15வது கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட SATRC செயல்திட்ட கட்டம் V இன் கீழான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும். சபையால் ஒப்படைக்கப்பட்ட வேலைகளில் செயற்குழு செயற்பாடுகளை நடத்துவதே கூட்டத்தின் நோக்கமாகும். அலைக்கற்றை செயற்குழுவுக்கு பின்வரும் வேலைகள் ஒதுக்கப்பட்டுள்ளன:

  1. SATRC நாடுகளில் அலைக்கற்றை மறுபயன்பாடு
  2. SATRC நாடுகளில் IMTக்கான அலைக்கற்றை தேவை மதிப்பீடு
  3. SATRC நாடுகளுக்கான வலையமைப்பு பகிர்வு ஒழுங்குபடுத்தல் பங்கை அதிகரித்தல்: செயலறு வலையமைப்பு பகிர்வு முதல் செல்லிட தொலைபேசைி நிகழ்நிலை வலையமைப்பு செயற்பாடு வரை
  4. செல்லிட தொலைபேசியில் பயன்படுத்தப்படும் அலைவரிசைகளில் அயனியாக்கமற்ற கதிரியக்க பாதுகாப்பு

கூட்டத்தில் SATRC உறுப்புநாடுகளிலிருந்து நிபுணர்கள் கலந்து கொள்வார்கள். SATRC உறுப்பு நாடுகளின் மேலதிக நிபுணர்கள் மற்றும் பிரதிநிதிகள் மற்றும் அந்த நாடுகளின் துணை உறுப்பினர்களும் வரவேற்கப்படுகிறார்கள்.

மேலும் தகவலுக்கு, தயவுசெய்து பார்வையிடவும் http://www.aptsec.org/