இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு


உரிம சட்டக மீளாய்வு செயலமர்வு- கொழும்பு இலங்கை

ITU நிபுணத்துவ உதவித் திட்டத்தின் கீழ், பங்குதாரர்களின் ஆலோசனை மற்றும் “உரிம சட்டக மீளாய்வு” குறித்த செயலமர்வு 2016 மார்ச் 8 முதல் 10 வரை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) இல் நடைபெற்றது. சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU) மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஆகியன இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. இந்த செயலமர்வு திரு. ITU பிராந்திய அலுவலகத்தின் சிரேஷ்ட ஆலோசகர் சமீர் சர்மா, மற்றும் ITU நிபுணர் மேத்யூ ஓ'ரூர்க் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்றது. இந்த செயலமர்வில் தொலைத்தொடர்பு செயற்படுத்துனர்களின் பிரதிநிதிகள் மற்றும் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) அதிகாரிகளின் அடங்கிய 50க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பங்கேற்றனர்.

மு.ப 9.00 - மு.ப 9:30 வரவேற்பு உரை ஆரம்ப உரை குழு புகைப்படம் திரு. சுனில் எஸ் சிறிசேன பணிப்பாளர் நாயகம் -TRCSL திரு. சமீர் சர்மா, சிரேஷ்ட ஆலோசகர்-ITU
மு.ப 9.00 - மு.ப 10:00 ஒழுங்குபடுத்தல் போக்குகள் மற்றும் ஒருங்கிணைப்புக்கான செயற்படுத்துனர்கள் [முன்வைப்பு] திரு திரு. சமீர் சர்மா, சிரேஷ்ட ஆலோசகர்-ITU
மு.ப 10.00 - மு.ப 10:30 தேனீர் இடைவேளை  
மு.ப 10.30 - மு.ப 11:30

ஒருங்கிணைந்த டிஜிட்டல் சூழலில் தொலைத்தொடர்பு உரிமம் [முன்வைப்பு]

சர்வதேச உரிமப் போக்குகள் மற்றும் சிறந்த நடைமுறைகள்
இலங்கையில் உரிம சீர்திருத்தத்திற்கான சாத்தியம்
உரிமம் இடமாற்றத்தின் சவால்களை நிர்வகித்தல்

திரு மேத்யூ ஓ'ரூர்க், ITU நிபுணர்
மு.ப 11.30 - பி.ப12.30

கேள்வி பதில் / திறந்த கலந்துரையாடல்

இலங்கையில் தற்போதுள்ள உரிம ஏற்பாடுகளின் நன்மைகள் மற்றும் வரம்புகளை கண்டறிதல் இலங்கையில் உரிமம் சீர்திருத்தம் தொடர்பான செயலமர்வ பங்கேற்பாளர்களின் தெரிவுகள் (உ-ம். விருப்பமான மாதிரி, நேரம், பரிமாற்ற செயன்முறை)
ஏனைய உரிம தலைப்புகள் பற்றிய கலந்துரையாடலும் வரவேற்கப்படுகிறது

வசதிப்படுத்துனர்

திரு மேத்யூ ஓ'ரூர்க், ITU நிபுணர்

பி.ப 12.30 - பி.ப 1.00 நிறைவு குறிப்புகள் திரு. மொகான் ஜயசேகர, பணிப்பாளர்/கொள்கை சர்வதேச உறவுகள் மற்றும் உரிம நிர்வாகம், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL)