இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு


15வது ஆசிய பசிபிக் தொலைத்தொடர்பு (APT) தொலைத்தொடர்பு/ICT அபிவிருத்தி மன்றம்

2018 ஜூன் 11 - 13, கொழும்பு, இலங்கை
15வது APT தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப அபிவிருத்தி மன்றம் (ADF-15) மேன்மைதங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) இந்நிகழ்வை நடத்தியது. இலங்கை APT இல் நீண்டகால உறுப்பினராக இருந்து வருகிறது, APT தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப அபிவிருத்தி மன்றத்தை இலங்கை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

திருமதி அரீவன் ஹாரங்சி APT இன் பொதுச் செயலாளர் திரு. ஒஸ்டின் பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளரும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் (TRCSL) தலைவரும். திருமதி. ADF இன் பிரதித் தலைவர் டெபுவா ஹன்டர் மற்றும் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (TRCSL) பணிப்பாளர் நாயகம் திரு.ஷமல் ஜயதிலக மற்றும் APT உறுப்பினர்கள், இணை உறுப்பினர்கள், இணை உறுப்பினர்கள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்கள் அடங்கிய 150க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பங்கேற்பாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த ஆண்டு APT, கொரியா குடியரசின் தேசிய தகவல் சமூக முகவர் நிறுவனத்துடன் இணைந்து, 2018 ஜூன் 14அன்று ADF-15 உடன் மீண்டும் ஒரு பின்னிணைப்பு நிகழ்வாக தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப புரோட்பேண்ட் இணைப்பு குறித்த ஒரு கூட்டு APT-NIA செயலமர்வை ஏற்பாடு செய்தது.

APT தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப அபிவிருத்தி மன்றமானது தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப கொள்கை வகுப்பாளர்கள், ஒழுங்குபடுத்துபவர்கள் மற்றும் ஏனைய தொடர்புடைய அதிகாரிகளை ஒன்றிணைத்து, கிராமப்புறங்கள் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப மேம்பாடு ஆகியவற்றில் விசேட கவனம் செலுத்தி பொதுவான ஆர்வமுள்ள பிரச்சனைகள் பற்றிய உரையாடலுக்கான பொதுவான தளத்திற்கு கொண்டு வருகிறது. மூலோபாய அடிப்படைகள் தொடர்பான பல்வேறு தலைப்புகள் குறித்து ADF-15 இல் கவனம் செலுத்தப்பட்டதுடன், இணைப்பு மற்றும் புத்தாக்க அடிப்படைகளில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. பகிர்ந்துகொள்ளப்பட்ட அனுபவங்களிலிருந்து நடைமுறை நுண்ணோக்குகளைப் பெறுவதற்கு மன்றம் உதவியாக இருந்தது.

ADF தனது பணியை பின்வரும் ஐந்து (5) மூலோபாயத் திட்டத்தின் மூலோபாய அடிப்படைகளில் கவனம் செலுத்துகிறது:

a. இணைப்பு: டிஜிட்டல் உட்கட்டமைப்பை அபிவிருத்திசெய்தல்;

b. புத்தாக்கம் சாதகமான சூழல்களை இயலுமாக்குதல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் நன்மைகளைப் பயன்படுத்துதல்;

c. நம்பிக்கை: தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் மூலம் பாதுகாப்பு மற்றும் தாங்குதிறனை ஊக்குவித்தல்;

d. திறன் விருத்தி உள்ளடக்கியதன்மையை ஊக்குவித்தல் மற்றும் நிபுணத்துவத்தை மேம்படுத்துதல்; மற்றும்

e. கூட்டாண்மை: பங்குதாரர்களுடன் மூலோபாய ஒத்துழைப்பை உறுதிப்படுத்துதல்.

தொலைத்தொடர்பு மற்றும் ICT உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. APT உறுப்பினர்கள் தங்கள் மக்களுக்கு கட்டுப்படியான விலையில் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப வசதிகளை கொண்டு வர பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், கொள்கை, தொழில்நுட்பம், பயன்பாடு போன்ற துறைகளில் பல சிக்கல்கள் உள்ளன, அவை பயனுள்ள பயன்பாட்டுக்குத் தீர்வு காணப்பட வேண்டும். APT தொலைத்தொடர்பு/தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப அபிவிருத்தி மன்றம் (ADF) ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான அபிவிருத்தித் தேவைகள் மற்றும் சிக்கல்களைத் தீர்க்க விரிவான, கவனம் மற்றும் முடிவு சார்ந்த உரையாடலுக்கு வசதியளிக்கும் ஒரு விசேட மன்றமாக நிறுவப்பட்டுள்ளது. அந்த நோக்கத்திற்காக ADF வெற்றிகரமாக ஒரு தளத்தை வழங்கியுள்ளதுடன், பங்கேற்பாளர்கள் தகவல் மற்றும் சிறந்த நடைமுறைகளின் அனுபவத்தைப் பகிர்வதன் மூலமும் டிஜிட்டல் இடைவெளியைக் குறைப்பதற்கான சேவைகள் மற்றும் தொழில்நுட்பங்களின் போக்குகள் மூலமும் நன்மைகளைப் பெறலாம்.

ADF ஆனது கிராமப்புறங்களில் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முன்னோடித் திட்டங்களின் அடைவுகள் மற்றும் ஜப்பான் மற்றும் கொரியாவின் மேலதிக வரவுசெலவுத்திட்ட பங்களிப்பின் மூலம் நிதியளிக்கப்பட்ட ஏனையதகவல் தொடர்பாடல் தொழிநுட்ப திட்டங்களுடன் இணைக்கிறது. உள்ளூர் ஒத்துழைப்பாளர்கள் மற்றும் APT உறுப்பினர்களின் நிபுணர்களின் நெருக்கமான ஒத்துழைப்பின் கீழ் பலனளிக்கும் முடிவுகளைப் பகிர்வதற்காக ADF ஒதுக்கப்பட்ட அமர்வில் திட்டங்களின் பெறுபேறுகள் அறிக்கையிடப்படுகின்றன.

ADF-15 இன் குறிப்பான நோக்கங்கள்;

  • சேவை கிடைக்காத மற்றும் குறைவான மக்கள்தொகைக்கு முக்கியத்துவம் கொடுத்து, புரோட் பேண்ட் இணைப்புக்கான அணுகலை அதிகரிப்பதில் உள்ள சிக்கல்களைத் தீர்த்தல்.
  • தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்தில் புத்தாக்க மற்றும் பெறுமதி உருவாக்கம் ஆகியவற்றிற்கு உகந்த சூழல்களை மேம்படுத்துவதில் உள்ள சிக்கல்களைத் தீர்த்தல்
  • பேண்தகு அபிவிருத்தி இலக்குகள் 2030 ஐ அடைவதற்கு தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்தின் பயன்பாட்டை மேம்படுத்துவதில் உள்ள சிக்கல்களைத் தீர்த்தல்
  • APT திட்டங்களின் பெறுபேறுகள் மற்றும் சாதனைகளை அறிக்கையிடல்
  • APT திட்டங்களால் நடைமுறைப்படுத்தப்படும் அனரத்த தயார்நிலை, இடர் குறைப்பு மற்றும் தணிப்பு தொடர்பான சவால்களை எதிர்கொள்தல்
  • நிதியளிக்கப்பட்ட திட்டங்களின் நிலைத்தன்மைக்கு தொடர்புடைய சிக்கல்களைப் பற்றி கலந்துரையாடல்
  • 2018-2020 ஆம் ஆண்டிற்கான APTயின் மூலோபாயத் திட்டத்தை நோக்கி பசிபிக் நாடுகளில் உள்ள தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப துறையின் உயர்மட்ட கொள்கை வகுப்பாளர்கள், ஒழுங்குபடுத்துனர்கள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளின் கவனத்தை ஈர்த்தல்.

ADF-15 இன் நிகழ்ச்சி நிரல், மேலதிக வரவுசெலவுத்திட்ட பங்களிப்புகள் (EBC), தேசிய புரோட்பேண்ட் திட்டம், சமமான மற்றும் உலகளாவிய தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப சேவைகள், கட்டுப்படியான மற்றும் நிலையான இணைப்பு ஆகியவற்றின் மூலம் நிதியளிக்கப்பட்ட APT ICT திட்டங்களின் அடைவுகள் மற்றும் பெறுபேறுகள் பற்றி கலந்துரையாடுவதற்கான தலைப்புகளின் பட்டியலை உள்ளடக்கியது.

குறிப்பான பெறுபேறுகள் பின்வருவனவற்றை உள்ளடக்கியதாகும்;

  • 2018-2020 ஆண்டுக்கான APT இன் புதிய மூலோபாயத் திட்டத்துடன் தொடர்புடைய உயர்நிலை நோக்குகள்;
  • 2016 மற்றும் 2017 நிதியாண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட APT தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப திட்டங்களின் அடைவுகள் மற்றும் பெறுபேறுகள் குறித்து பங்கேற்பாளர்களை இற்றைப்படுத்தல்;
  • திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் கையாள வேண்டிய சிறந்த நடைமுறைகள் மற்றும் சிக்கல்களைப் பகிர்ந்து கொள்ளுதல்
  • தேசிய புரோட்பேண்ட் திட்டங்களின் அண்மைய அபிவிருத்தி குறித்த இற்றைப்படுத்தல்
  • உலகளாவிய சேவை நிதிளின் பலன்களை அதிகப்படுத்துவது குறித்த அண்மைய அபிவிருத்தி மற்றும் இற்றைப்படுத்தலைப் பகிர்தல்
  • அதிவேக, கட்டுப்படியான மற்றும் நிலையான புரோட்பேண்ட் வலையமைப்புகளை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றில் உறுப்பினர்களின் செயற்பாடுகள் பற்றிய இற்றைப்படுத்தல்
  • அதிக சாத்தியமுள்ள துறைகளில் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்தின் பயன்பாட்டை மேம்படுத்த கொள்கை மற்றும் ஒழுங்குபடுத்தல் சட்டகத்தின் இற்றைப்படுத்தல்
  • ஸ்டார்ட் அப்கள் மற்றும் SME களின் சவால்கள் மற்றும் வெற்றிக் கதைகள் மற்றும் நிலையான சூழல் முறைமைகளை வசதியளிப்பதற்கும் உருவாக்குவதற்கும் கொள்கை மற்றும் ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகள் பற்றிய இற்றைப்படுத்தல்
  • ITU மற்றும் APT இன் பணிகளுக்கு இடையே அப்-ஸ்ட்ரீம் மற்றும் டவுன்-ஸ்ட்ரீம் செயற்பாடுகளை வளப்படுத்த ITU (ITU-D) இன் அபிவிருத்தித் துறை பற்றிய இற்றைப்படுத்தல்.

அங்குரார்ப்பண உரை திரு. ஒஸ்டின் பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் TRCSL இன் தலைவர்