இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு


சாதன அனுமதி - கம்பிவழி உபகரணங்கள்

தொலைத்தொடர்பு செயற்படுத்துனர்கள், விற்பனையாளர்கள் அல்லது தனிநபர்களால் வாடிக்கையாளர் வளாக உபகரணங்கள்/டெர்மினல் கருவிகள் உள்ளிட்ட வலையமைப்பு உபகரணங்களை இறக்குமதி செய்வதற்குதொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) , இறக்குமதி கட்டுப்பாட்டாளர்/சுங்கம்/முதலீட்டுச் சபைக்கு ஒப்புதல்/அங்கீகாரத்தை வழங்குகிறது.

வகை அனுமதிகள்

  1. சட்ட ஏற்பாடு
    தொலைத்தொடர்புச் சட்டத்தின் பிரிவு 5(q)ன் ஏற்பாடுகளின்படி, டெர்மினல் உபகரணங்களுக்கு ஆணைக்குழுவின் வகை அனுமதி தேவை. செயற்படுத்துனர்களுக்கு வழங்கப்பட்ட முறைமை உரிமத்தின் அட்டவணை 2, ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வகையிலான தொலைத்தொடர்பு கருவியை இணைக்க அங்கீகரிக்கிறது.
  2. வகை அனுமதி தேவைப்படும் டெர்மினல் உபகரணங்களின் வகைகள்
    • தொலைபேசி உபகரணங்கள்
    • தொலைநகல் இயந்திரங்கள்
    • PABXs
    • மோடம்கள்
    • உரிமம் பெற்ற வலையமைப்புடன் இணைக்கப்பட வேண்டிய வேறு எந்த வாடிக்கையாளர் வளாக உபகரணங்களும்.
  3. வகை அனுமதி நடைமுறை
  4. வகை அங்கீகரிக்கப்பட்ட தயாரிப்புகள்

இறக்குமதி அனுமதி அங்கீகாரம்

இறக்குமதி அனுமதி அங்கீகாரத்தின் நிலை

வலையமைப்பு உபகரணங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கான அனுமதியைப் பெற விண்ணப்பங்களைச் செய்வதற்கான நடைமுறை

இலங்கைக்குள் வலையமைப்பு உபகரணங்களை இறக்குமதி செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள், இறக்குமதி கட்டுப்பாட்டாளர் /இலங்கை சுங்கத் திணைக்களம்/ முதலீட்டுச் சபைக்கான அனுமதி கடிதங்களைப் பெறுவதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறை குறித்து இதன்மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் பின்வரும் ஆவணங்களுடன் TRC இன் வலையமைப்பு பிரிவுக்கு எழுத்துப்பூர்வமாக அனுப்பப்பட வேண்டும்.

  • உபகரணங்களின் தேவையை விளக்கும் முகப்புக் கடிதம்.
  • முன்வரைவுப்படிவம்/வர்த்தக விலைப்பட்டியல்/ஏர்வே பில்/இறக்குமதி செய்யப்பட வேண்டிய பொருட்களைத் தெளிவாகக் குறிக்கும் சுங்கத் தடுப்பு.
  • தொடர்புடைய தொழில்நுட்ப விவரக்குறிப்புகள்/தயாரிப்பு சிற்றேடு
  • வலையமைப்பு வரைபடம் (பொருத்தமானால்)
  • விற்பனையாளர் உரிமத்தின் பிரதி (பொருத்தமானால்)

எந்தவொரு வலையமைப்பு உபகரணங்களையும் இறக்குமதி செய்யும் அல்லது கையில் எடுத்துச் செல்லும் எந்தவொரு நபரும் இந்த நடைமுறைக்கு இணங்க வேண்டும். உபகரணங்களின் மீள் ஏற்றுமதிக்கு பின்வரும் ஆவணங்கள் எழுதப்பட்ட விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

  • மீள்-ஏற்றுமதி செய்ய வேண்டிய உபகரணங்களின் விரிவான பட்டியல் (Proforma Invoice)
  • இறக்குமதியின் போது தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) வழங்கிய ஒப்புதலின் பிரதி
  • உபகரணங்கள் நிறுவப்பட்ட அமைவடங்களின் விவரங்கள்