இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு


கையடக்க தொலைபேசிகள் / சாதனங்களுக்கான ஒப்புதல்

சிம் ஒன்றைபவித்து தொலைத்தொடர்பு வலையமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ள எந்த வகையான கையடக்கத் தொலைபேசிகளையும்/ சாதனங்களையும் இறக்குமதி செய்வதற்கு/கொண்டு வருவதற்கு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிடமிருந்து (TRCSL) அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளல் அவசியமானதாகும்.

தனிப்பட்ட பயன்பாட்டிற்கான கையடக்க தொலைபேசிகள்  / சாதனங்கள்

  1. ஐந்து (5) அலகுகள் வரை மட்டுமே இறக்குமதி / தனிப்பட்ட பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியும்.
  2. விண்ணப்பமானது பின்வரும் ஆவணங்களை இணைத்து பரிசீலனைக்காக TRCSL க்கு எழுத்து மூலமாக சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
    1. முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்.
    2. பெறுனரின் பெயர் மற்றும் இறக்குமதி செய்ய/விடுவிப்பு செய்யவுள்ள உபகரணங்களின் விபரங்களை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள விலைப்பட்டியல் / தடுப்பு பற்றுச்சீட்டு (Detention Receipt) / விமான வழி பற்றுச்சீட்டு (Air way Bill) / பொருள் அனுப்பியதற்கான பற்றுச்சீட்டு (Parcel Receipt) .
    3. மேலே (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள உபகரணங்களின் தொழில்நுட்ப விபரக்குறிப்பு (Specifications).
    4. தேசிய அடையாள அட்டை/கடவுச்சீட்டு/சாரதி அனுமதிப்பத்திரத்தின் பிரதி
    5. மேலே (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள நபர் சார்பில் வேறு யாரேனும் அனுமதியைப் பெற வேண்டுமாயின் அதிகாரமளித்தல் கடிதம் மற்றும் இருவரினதும் தேசிய அடையாள அட்டை/ கடவுச்சீட்டின் பிரதிகள்.
  3. TRCSL இனால் செயல்முறைப்படுத்தப்படும் விண்ணப்பப் படிவம்.
  4. இறக்குமதிசெய்ய/விடுவிக்க உத்தேசித்துள்ள உபகரணத்திற்காக கட்டணங்கள் ஏற்புடையதாயின் வரி விலைப்பட்டியல் TRCSL மூலம் விண்ணப்பதாரருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதுடன் அங்கீகாரத்தை பெறுவதற்கு பணம் செலுத்தப்படவும் வேண்டும்.
  5. மேலே 2 (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் விண்ணப்பதாரிக்கு பின்வரும் இரண்டு கடிதங்கள் வழங்கப்படும்.
    1. ஏற்றுமதி மற்றும் கட்டுப்பாட்டாளருக்கு முகவரியிடப்பட்ட ஆட்சேபனை இல்லை கடிதம்.
    2. சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு முகவரியிடப்பட்ட ஆட்சேபனை இல்லை கடிதம்.

கையடக்க தொலைபேசிகள்/  சாதனங்களின் மொத்த இறக்குமதி

  1. TRCSL இனால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் வியாபாரி உரிமம் இருக்க வேண்டும்.
  2. இந்த வகையின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட கையடக்க தொலைபேசிகள்  / சாதனங்கள் மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுகின்றன. வகை ஒப்புதல் பெறுவதற்கான விவரங்கள்
  3. விண்ணப்பபடிவமானது பரிசீலனைக்காக பின்வரும் ஆவணங்களுடன் TRCSL க்கு எழுத்து மூலமாக சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
    1. இறக்குமதி செய்ய உத்தேசித்துள்ள உபகரணங்களின் விபரங்களைக் குறிக்கும் கோரிக்கைக் கடிதம்
    2. முன்மாதிரி விலைப்பட்டியல் (Pro-forma Invoice) (அசல் + 3 நகல்கள், அசல் சரிபார்பின் பின் மீளளிக்கப்படும்)
    3. வகை ஒப்புதல் இலக்கம் மற்றும் திகதி அல்லது வகை அனுமதி தொடர்பாக TRCSL ஆல் வழங்கப்பட்ட வேறு ஏதாவது ஆவணங்கள் (ஏற்புடையதாயின்)
    4. செல்லுபடியாகும் விற்பனையாளர் உரிமத்தின் நகல்
  4. பாதுகாப்பு அனுமதிக்காக (ஏற்புடையதாயின்) விண்ணப்பம் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு (MOD) அனுப்பப்படும்
  5. வரி விலைவிவரப் பட்டியல் TRCSL இனால் தயாரிக்கப்பட்டு விண்ணப்பதாரிக்கு வழங்கப்படுகின்றது (கட்டணங்கள் ஏற்புடையதாக இருப்பின்)
  6. TRCSL விடயங்கள் 3(i) மற்றும் 3(ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளித்து கட்டுப்பாட்டாளர்/இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளருக்கு ஆட்சேபனை இல்லை கடிதத்தை அனுப்பி வைக்கும்.
  7. கீழ்குறிப்பிடப்பட்ட  ஆவணங்களை சமர்ப்பித்ததன் பின்னர் TRCSL சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு முகவரியிடப்பட்ட ஆட்சேபனை இல்லை கடிதமொன்றை விண்ணப்பதாரருக்கு வழங்கும் .
    1. கட்டுப்பாட்டாளரினால் வழங்கப்பட்ட அதிகாரமளித்தல் கடிதத்தின் பிரதி (இறக்குமதி உரிமம்)
    2. வணிக விலைப்பட்டியல் (அசல் +3 பிரதிகள், அசல் சரிபார்த்தத்தின் பின்னர் மீள்ளளிக்கப்டும்  அல்லது LC இன் TT ஆல் பணம் அனுப்பப்பட்டது / பணம் செலுத்தப்பட்டது என்பதை உறுதிப்படுத்தும் வங்கியால் முறையாக சான்றளிக்கப்பட்ட வணிக விலைப்பட்டியலின் நகல்)
    3. கட்டுப்பாட்டாளர்/இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு முகவரியிடப்பட்ட TRCSL யால் வழங்கப்பட்ட  கடிதத்தின் பிரதி (மேலே 6 வது விடயம்)
    4. படிவ விலைவிவரப் பட்டியலின் பிரதி (மேலே உள்ள விடயம் 3(ii) )
    5. கையடக்க தொலைபேசி /சாதனங்களின் IMEI எண்களை இணைப்பு 1 வடிவத்தில் trives@trc.gov.lk மின்னஞ்சல் செய்ய வேண்டும்
    6. மேலே 05 ஆம் விடயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விலைவிவரப் பட்டியலுக்கு முழுமையாக பணம் செலுத்துவதற்கான ஆதாரம்  (ஏற்புடையதாயின்)
  8. கையடக்கத் தொலைபேசிகள்/ சாதனங்கள் இறக்குமதி விடயத்தில் TRCSL குறிப்பு இலக்கமொன்றை வழங்குவதுடன் அது கையடக்கத் தொலைபேசியின்/ சாதனத்தின் பெட்டியில் வாடிக்கையாளர் குறிப்புக்கான (மாதிரி ஸ்டிக்கர்) ஸ்டிக்கர் வடிவில் ஒட்டப்படும்.

வகை ஒப்புதலுக்கு விண்ணப்பிக்க வேண்டிய தேவைகள் கையடக்க தொலைபேசிகள்

கையடக்க தொலைபேசிகள் பற்றிய தகவல்கள்

பதினைந்து இலக்க சர்வதேச கையடக்க உபகரண அடையாளம் (IMEI) என்பது பேட்டரியை அகற்றும்போது பொதுவாக உள்ளே காணப்படும் ஒவ்வொரு தொலைபேசிக்கும் வழங்கப்படும் தனித்துவமான எண் ஆகும். கையடக்க தொலைபேசியில் உள்ள கீபேடில் *#06# என உள்ளிடுவதன் மூலமும் இதை மொபைலின் திரையில் காண்பிக்க முடியும். வகை ஒதுக்கீடு குறியீடு (TAC) என்பது IMEI எண்ணின் முதல் எட்டு இலக்கங்கள் ஆகும், இது குறிப்பிட்ட சாதனத்தின் MARKETING பெயர் மற்றும் உற்பத்தியாளரை தனித்துவமாகக் குறிக்கிறது. மொபைல் தொலைபேசியின் IMEI எண்ணை பின்வரும் வடிவத்தில் 1909 க்கு SMS அனுப்புவதன் மூலம் சரிபார்க்கலாம்.

            IMEI (இடைவெளி) 15 இலக்க IMEI எண்

அனைத்து கையடக்க தொலைபேசி விற்பனையாளர்களும் TRCSL ஆல் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் விற்பனையாளர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்பதுடன் அவர்களின் விற்பனை நிலையங்களில் உரிமம் காட்சிப்படுத்தப்படுதல் வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள்/ சாதனங்கள் TRCSL இணையத்தளத்தில் காணப்படுகின்றன www.trc.gov.lk
மேலதிக விபரங்களுக்கு  தொடர்பு கொள்க:

எஸ்.பி.புலத்கம
உதவிப் பணிப்பாளர் (ஸ்பெக்ட்ரம் முகாமைத்துவம் / IT)
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுஇல
No. 276, எல்விட்டிகல
மாவத்தை, கொழும்பு 08


Extension   : +94 112689345 (Ext: 4105)
E-mail         : bulathgama@trc.gov.lk