இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு


முகாமைத்துவக் குழு

திருமதி ஆர்.எம்.டி.கே.பி. லிவேரா
பிரதிப் பணிப்பாளர் நாயகம் (ஒழுங்குபடுத்தல் விவகாரங்கள்)
: tharalika@trc.gov.lk
  : +94 11 2689345

திருமதி கே.எஸ்.எம். விசாகா
பிரதிப் பணிப்பாளர் நாயகம் (அபிவிருத்தி)
: vishaka@trc.gov.lk
  : +94 11 2689345

திரு. ஈ.என்.பி.கே.ரத்னபால
பிரதிப் பணிப்பாளர் நாயகம் (கொள்கை மற்றும் திட்டமிடல்)
: nihal@trc.gov.lk
  : +94 11 2689345

திரு. எம்.ஜே.எஸ் ரவிசிங்க
பணிப்பாளர்/நிர்வாகம் மற்றும் கூட்டுறவு அலுவல்கள்
: ravisingha@trc.gov.lk
  : 1900 Extension: 6100 / +94 11 2673486

திரு. வை.எஸ்.பி.பி. குணரத்ன
உதவிப் பணிப்பாளர் / மனிதவள அபிவிருத்தி

: saliya@trc.gov.lk
  : 1900 Extension: 6104 / +94 11 2669789

 

திரு. கே.எஸ்.என். விஜேரத்ன
உதவிப் பணிப்பாளர் / நிர்வாகம்
:  sameeraw@trc.gov.lk
  : 1900  Extension: 6101 /  +94 11 2674304

முழு அமைப்பினதும் சீரான செயற்பாட்டிற்கு இப்பிரிவின் பங்கு முக்கியமானது, மேலும் அதன் நோக்கம் பரந்த அளவிலான செயற்பாடுகள் மற்றும் பொறுப்புகளை உள்ளடக்கியது. மனித வளங்கள் மற்றும் கூட்டுறவு அலுவல்களின் நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்திக்கு இந்த பிரிவு பொறுப்பாகும். இப்பிரிவின் நோக்கம் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (TRCSL) செயற்பாடுகளைத் திட்டமிடுதல் மற்றும் கண்காணித்தல், ஊழியர்கள் தங்கள் பணித் தரத்தை மேம்படுத்துவதற்கு உகந்த சூழலைப் பராமரித்தல் மற்றும் உருவாக்குதல் மற்றும் நிறுவனத்திற்குள்ளும் பிற நிறுவனங்களுடனும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றையும் மேறற்கொள்கிறது.

மேலும், அலுவலகத் தேவைகள் மற்றும் ஊழியர்களுக்கான ஆதரவு வசதிகளை வழங்குதல், ஊழியர்களின் நலனை உறுதி செய்தல், நூலக வசதிகளை வழங்குதல் மற்றும் நிறுவனத்தின் முக்கிய நிகழ்வுகளை ஊடகங்களுக்கு வழங்குதல் ஆகியவற்றை இப்பிரிவு நிர்வகிக்கிறது.

திரு. எச்.டபிள்யு.கே. இந்திரஜித்
பணிப்பாளர் / போட்டி
: indrajith@trc.gov.lk
  : +94 11 2676740
  : 94 11 2675988

திருமதி ஸ்ரீயானி மாவெல்லகே
பிரதிப் பணிப்பாளர் / போட்டி
: sriyani@trc.gov.lk
  : +94 11 2689345

திரு. இந்திக பிரபாத்
உதவிப் பணிப்பாளர் / போட்டி
: indikap@trc.gov.lk
  : +94 11 2689345

திரு. ஸ்ரீலால் குருகே
உதவிப் பணிப்பாளர் /நிதிசார் விசாரணைகள்
: doma@trc.gov.lk
  : +94 11 2689345

நுகர்வோர் மற்றும் செயற்படுத்துனர்களின் நலன்களை பூர்த்தி செய்யும் திறமையான, முழுமையான தொலைத்தொடர்பு சேவையை வழங்க போட்டிப் பிரிவு ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. தொலைத்தொடர்பு துறையில் நியாயமான கட்டணங்கள் மற்றும் தரமான சேவையை பராமரிக்கும் அதே வேளையில், இப்பிரிவானது கட்டண விவகாரங்கள் மற்றும் இணைப்பு சேவைகளை ஒழுங்குபடுத்துகிறது, தொழில்துறை தகவலை வெளியிடுகிறது, செயற்படுத்துனர் செயலாற்றுகையை பகுப்பாய்வு செய்வதுடன், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குகிறது.

சேவையில்லாத மற்றும் பின்தங்கிய பகுதிகளுக்கு தொலைத்தொடர்பு வசதிகளை வழங்க செயற்படுத்துனர்களை ஊக்குவித்தல் மற்றும் தொலைத்தொடர்பு வரி, சர்வதேச தொலைத்தொடர் செயற்படுத்துனர்கள் வரி, தொடர்பாடல் கோபுர வரி, தொலைபேசி குறுஞ்செய்தி சேவை வரி மற்றும் மேல்வரி வசூலிப்பது ஆகியவையும் இதில் அடங்கும். புதிய சேவைகளை வழங்கும் தொலைத்தொடர்பு துறையில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு நிபுணர்கள் செயற்படுத்துனர்களின் திட்டங்களுக்கு அவசியமானவர்கள், மேலும் அத்தகைய நிபுணர்களின் விசாக்களை செயற்படுத்த தேவையான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

திருமதி.எச்.பி.எம்.பத்திரன
பணிப்பாளர்/இணக்கம் (கண்காணிப்பு மற்றும் QOS)
: menaka@trc.gov.lk
  : +94 11 2673079
  : +94 11 2676985

திரு. டி.என். விஜேசிங்க
உதவிப் பணிப்பாளர்/இணக்கம்
: deepalw@trc.gov.lk
  : 1900 Extension: 2433

திருமதி. அயோத்யா ஜயசேன
உதவிப் பணிப்பாளர்/இணக்கம்
: ayodhya@trc.gov.lk
  : 1900 Extension: 2433

திருமதி. ஹிரண்ய குமாரசிறி
உதவிப் பணிப்பாளர்/இணக்கம்
: hiranya@trc.gov.lk
  : 1900

திரு. யோகராஜா மதனன்
உதவிப் பணிப்பாளர்/இணக்கம்
: yogarajah@trc.gov.lk
  : 1900

இலங்கையில் நம்பகமான மற்றும் திறமையான தேசிய மற்றும் சர்வதேச தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவதை உறுதி செய்வதே தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (TRCSL) முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். இந்த நோக்கத்திற்காக, நம்பகமான, திறமையான மற்றும் தரமான தொலைத்தொடர்பு சேவையை வழங்குவதற்கு தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் தங்கள் ஒழுங்குபடுத்தல் கடப்பாடுகளுக்கு இணங்குவதை உறுதிசெய்ய ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இதற்கு தொடர்ச்சியான கண்காணிப்பு, விசாரணை மற்றும் தொழில்துறையின் புலனாய்வு மற்றும் பொருத்தமான ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகளை செயற்படுத்துவது அவசியம். நுகர்வோர் முறைப்பாடுகளைச் செயன்முறைப்படுத்துதல் மற்றும் அவர்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வுகளைக் கண்டறிதல் வாடிக்கையாளர் திருப்தி மற்றும் சுயவிவரத்தை மேம்படுத்தல். இந்தப் பொறுப்புகள் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (TRCSL) இணக்கம் மற்றும் புலனாய்வுப் பிரிவினால் கையாளப்பட்டன.

திரு. எம்.கே. ஜயந்த
பணிப்பாளர் / நிதி
: jayanthamk@trc.gov.lk
  : +94 11 2676687

திருமதி எல். தீபிகா ஜெயவிக்ரம
உதவிப் பணிப்பாளர் / நிதி (செலவு)
: deepikaj@trc.gov.lk
  : +94 11 2675781

திரு. டி.பி.சி.யு.கே. ஹேமபால
உதவிப் பணிப்பாளர் / நிதி (வருமானம்)
: chamal@trc.gov.lk
  : +94 11 2671680

ஆணைக்குழுவின் அனைத்து கண்காணிப்பு செயற்பாடுகளையும் உள்ளடக்கிய நிதி முகாமைத்துவத்தின் அடிப்படையில் நிதிப் பிரிவினால் ஒரு முக்கிய பங்கு மேற்கொள்ளப்படுகிறது. வருமான சேகரிப்பு, வருமானம் மற்றும் செலவுப் பதிவு, நிதி முகாமைத்துவம் மற்றும் வருமானம் மற்றும் செலவினங்களின் முறையான அறிக்கையிடல் ஆகியவை முக்கிய சிறப்பம்சங்களாகும். அதுமட்டுமின்றி, கட்டுப்படுத்துவதும் செலவு செய்வதும் இரண்டாம்பட்சமானதாக இல்லை, குறிப்பாக நிதி ஒழுங்குமுறைகளின் தொடர்புடைய விதிகள் மற்றும் ஒழுங்குவிதிகள், தொடர்புடைய சுற்றறிக்கைகள் மற்றும் ஆணைக்குழு முடிவுகள் போன்ற சட்டரீதியான தேவைகளுக்குள்.

மேலும், துல்லியமான நிதிப் பதிவேடுகளைப் பராமரிப்பதும் பேணுவதும் நிதிப் பிரிவின் முக்கியப் பொறுப்புகளாகும், ஏனெனில் இது அரசாங்கம் மற்றும் ஏனைய பங்குதாரர்களால் முக்கிய முடிவுகளை எடுக்க வழிவகுக்கிறது. அனைத்து அரசாங்க நிறுவனங்களைப் போலவே, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவானது (TRCSL) பரிவர்த்தனைகளின் துல்லியம் மற்றும் முழுமையின் அடிப்படையில் ஒரு கருத்தை தெரிவிக்க, கணக்காய்வாளர் நாயகத்துக்கு நிதி அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டிய சட்டக் கடப்பாட்டினைக் கொண்டுள்ளது. மேலும், அனைத்து நிதிக் கொள்கைகளும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் கோட்பாடுகள், இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவகத்தால் வெளியிடப்பட்ட கணக்கியல் தரநிலைகள் மற்றும் கொள்கைகளுடன் இணங்குவதையும், நிதி நடைமுறைகள் அரசாங்கத்தின் நிதி ஒழுங்குமுறைகளுக்கு இணங்குவதையும் உறுதிப்படுத்துதல். நிதிப் பிரிவு நிதி நிர்வாகம், செலவுக் கட்டுப்பாடு மற்றும் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் (TRCSL) பயனுறுதிவாய்ந்த மற்றும் சிறந்த மூலோபாய முடிவுகளை எடுப்பதிலும் ஈடுபட்டுள்ளது.

திரு. எஸ்.ஈ. வாகிஸ்ட
பணிப்பாளர் / தகவல் தொழில்நுட்பம்
: wakista@trc.gov.lk
  : +94 11 2689345

தகவல் தொழில்நுட்பப் பிரிவு (IT) தேவையான மென்பொருள், தீர்வுகள் மற்றும் தளங்களைச் செயற்படுத்துவதன் மூலம் தொடர்புடைய பங்குதாரர்களிடையே ஒரு சாதகமான பணிச்சூழலை நடைமுறைப்படுத்தி, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) முழுவதும் டிஜிட்டல் மாற்றத்தை அறிமுகப்படுத்த ஆரம்பித்துள்ளது. இது நிறுவனத்தின் உள்ளக மற்றும் வெளி செயன்முறைகளை தன்னியக்கமாக்குவதுடன், அண்மைய நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஊழியர்களுக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் உதவுகிறது.

தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) செயற்பாடுகளின் செயற்திறன் மற்றும் வினைத்திறனை உறுதி செய்வதிலும், டிஜிட்டல் முறையில் இயங்கும் நிறுவனங்களை செயற்படுத்த தகவல் தொழில்நுட்பத்தின் மூலோபாய பயன்பாட்டின் மூலம் செயற்பாடுகளை மேம்படுத்துவதிலும் தொழிநுட்பப் பிரிவு பிரிவு முக்கிய பங்கு வகிக்கிறது. தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (TRCSL) ஊழியர்களிடையே அண்மைய தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாட்டை அறிமுகப்படுத்த திறன்-விருத்தி/அறிவு மேம்பாட்டு திட்டங்கள் நடத்தப்படுகின்றன.

திரு. சமன் கித்சிறி
உள்ளக கணக்காய்வாளர்
: samankith@trc.gov.lk
  : +94 11 2671677

உள்ளக கணக்காய்வு என்பது மூலோபாயங்கள், குறிக்கோள்கள் மற்றும் இடர் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது நிறுவனத்திற்கும் அதன் பங்குதாரர்களுக்கும் பெறுமதியைச் சேர்ப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு சுயாதீனமான செயற்பாடாகும்; நிர்வாகம், இடர் முகாமைத்துவம் மற்றும் கட்டுப்பாட்டு செயன்முறையை மேம்படுத்துவதற்கான வழிகளை வழங்க முயற்சிப்பதுடன், புறநிலையாக பொருத்தமான உத்தரவாதத்தை வழங்குகிறது. தரவு மற்றும் வர்த்தக செயன்முறைகளின் முறையான பகுப்பாய்வு மற்றும் மதிப்பீடுகளின் அடிப்படையில் நுண்ணோக்கு மற்றும் பரிந்துரைகளை வழங்குவதன் மூலம் ஒரு நிறுவனத்தின் நிர்வாகம், செயற்திறன், இடர் முகாமைத்துவம் மற்றும் வினைத்திறனை மேம்படுத்துவதற்கான ஊக்கியாக இது உள்ளது. ஒருமைப்பாடு மற்றும் வகைகூறலுக்கான அர்ப்பணிப்புடன், ஒரு நிறுவனத்திற்குள் உள்ளக கணக்காய்வின் நோக்கம் பரந்ததாகும்.

இது செயற்பாடுகளின் வினைத்திறன், நிதி அறிக்கையின் நம்பகத்தன்மை, மோசடிகளைத் தடுத்தல் மற்றும் விசாரணை செய்தல், சொத்துக்களைப் பாதுகாத்தல் மற்றும் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்குதல் போன்ற பகுதிகளை உள்ளடக்கியிருக்கலாம். தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (TRCSL) உள்ளக கணக்காய்வுப் பிரிவின் தலைவர் (உள்ளக கணக்காய்வாளர்) நேரடியாக ஆணைக் குழுவிற்கு அறிக்கையிடுகிறார், மேலும் அறிக்கைகள் கணக்காய்வுக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படுகின்றன. நிர்வாக ரீதியாக, உள்ளக கணக்காய்வாளர் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிக்கை செய்கிறார்.

திருமதி ஜி.சி.பி. மொரகொட
பணிப்பாளர்/சட்ட விவகாரங்கள்
: gauri@trc.gov.lk
  : +94 11 2689990

திருமதி சுஜீவா ரொட்ரிகோ
பிரதிப் பணிப்பாளர் /சட்டம்
: sujeewa@trc.gov.lk
  : +94 11 2691747

திரு. இந்திக மேத்யூ
உதவிப் பணிப்பாளர் /சட்டம்
: mathew@trc.gov.lk
  : +94 11 2689350

ஆணைக்குழுவுக்கு அனைத்து சட்ட மற்றும் ஒழுங்குமுறை சிக்கல்களிலும் ஆலோசனை வழங்குவதில் சட்டப் பிரிவு முக்கிய பங்கு வகிக்கிறது. தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) ஒரு தரப்பாக இருக்கும் அனைத்து வழக்கு விடயங்களையும் இப்பிரிவு நிர்வகிக்கிறது. தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (TRCSL) ஒழுங்குபடுத்தல் செயற்பாடுகளுக்கு சட்டப் பிரிவின் பங்கு அவசியம். 1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்புச் சட்டத்தின்படி திருத்தப்பட்ட மற்றும் TRC ஆல் மேற்கொள்ளப்படும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளில் நேரடியாக தொடர்புடைய ஏனைய நேரடியாக தொடர்புடைய சட்டங்களின் அடிப்படையில் சட்டப்பூர்வ கருத்துக்களை வழங்குவதற்கான பொறுப்பு சட்டப் பிரிவுக்கு உள்ளது.

திரு. எல். கணேசமூர்த்தி
பணிப்பாளர் /உரிம முகாமைத்துவம்
: ganesh@trc.gov.lk
  : +94 11 2675779
  : +94 11 2671444

திரு. டி.ஜி.பிரேமரத்ன
உதவிப் பணிப்பாளர் /உரிம முகாமைத்துவம்
: tgprem@trc.gov.lk
  : +94 11 2689345

திரு. சுதர்ஷன் சுதர்ஷன் இரத்தினேஸ்வரன்
உதவிப் பணிப்பாளர் /உரிம முகாமைத்துவம்
: sutharshan@trc.gov.lk
  : +94 11 2689345

தேசிய நலனுக்கு அவசியமானதாகக் கருதப்படும் அத்தகைய சேவைகளுக்கான அனைத்து நியாயமான கோரிக்கைகளையும் பூர்த்தி செய்வதற்காக இலங்கையில் நம்பகமான மற்றும் வினைத்திறனான தேசிய மற்றும் சர்வதேச தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவதை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு உறுதிப்படுத்த வேண்டும். உரிமம் பெற்ற செயற்படுத்துனர், 1996 ஆம் ஆண்டின் 27 ஆம் சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட 1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்புச் சட்டத்தின் 17ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் படி சேவைகள் வழங்கப்படுவதை உறுதிசெய்கிறது. இச்சட்டத்தின் மேலே குறிப்பிடப்பட்டுள்ள பிரிவின்படி, ஒரு முறைமை உரிமத்தின் அதிகாரத்தின் கீழே அன்றி எந்தவொரு நபரும் இலங்கையில் பொதுத் தொலைத்தொடர்பு முறைமையை செயற்படுத்தக்கூடாது. பொது ஆலோசனை மற்றும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு உட்பட்டு, முறைமை உரிமங்களை அமைச்சர் வழங்குகிறார்.

திருமதி எஸ்.ஏ.ஆர். கமலநயனா
பணிப்பாளர்/வலையமைப்புகள்
: nayana@trc.gov.lk
  : +94 11 2689343
  : +94 11 2672195

திரு.ஐ.எம். ஜவ்சி
பிரதிப் பணிப்பாளர் /வலையமைப்பு
: jawsi@trc.gov.lk
  : +94 11 2683861

திரு.டி.எம்.எஸ்.ஏ.திசாநாயக்க
உதவிப் பணிப்பாளர்/வலையமைப்பு (உட்கட்டமைப்பு முகாமைத்துவம்)
: aravinda@trc.gov.lk
  : +94 11 2683863

திருமதி எச்.பி.எஸ்.ரத்நாயக்க
உதவிப் பணிப்பாளர்/வலையமைப்பு (இலக்கமிடல்)
: harshi_r@trc.gov.lk
  : +94 11 2689240

திரு. டபிள்யூ.எம்.என்.ஜே.விஜயரத்ன
உதவிப் பணிப்பாளர்/வலையமைப்பு (உபகரண அங்கீகாரம்)
: jagathw@trc.gov.lk
  : +94 11 2676986

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் வலையமைப்புப் பிரிவு இலங்கையில் செயற்படும் பொது மற்றும் தனியார் தொலைத்தொடர்பு வலையமைப்புகள் தொடர்பான விவகாரங்களை ஒழுங்குபடுத்துகிறது. வலையமைப்புகள் பிரிவின் கீழ் வரும் பகுதிகளாவன, பொதுத் தொலைத்தொடர்பு வலையமைப்புகளுக்கான தேசிய இலக்கமிடல் , சமிக்ஞை குறியீடுகளை வழங்குதல், செல்லிட வலையமைப்பு குறியீடுகளை வழங்குதல், பொருள் அடையாளங்காட்டிகளை வழங்குதல், தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு பயன்படுத்தலுக்கு வசதியளித்தல், தொலைத்தொடர்பு உபகரண விற்பனையாளர்களுக்கு உரிமம் வழங்குதல், வகை அங்கீகார சான்றிதழ் வழங்குதல் , வலையமைப்பு உபகரணங்களுக்கான இறக்குமதி மற்றும் சுங்க அனுமதிகள், இலங்கையில் உள்ள தொலைத்தொடர்பு வலையமைப்புகளுக்கு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதை சாத்தியமாக்குதல்.

திரு. எம்.பி. குணசிங்க
பணிப்பாளர் (கொள்கை மற்றும் சர்வதேச உறவுகள்)
: gunasinghe@trc.gov.lk
  : +94 11 2689345

திரு.டி.ஜி.ஜானக ரவீந்திர
உதவிப் பணிப்பாளர் (சர்வதேச உறவுகள்)
: ravindra@trc.gov.lk
  : +94 0112682564, Ext: 5202 Mobile: 0706236466,

இலங்கை தொலைத்தொடர்புச் சட்டத்தின்படி, பொதுத் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவது தொடர்பான கொள்கை விடயங்களில் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் அதிகாரம் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு (TRCSL) வழங்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU) அல்லது அதனுடன் இணைந்த அமைப்புகளுடன் தொலைத்தொடர்பு விதிமுறைகளுடன் தொடர்புடைய அனைத்து விடயங்களிலும் ஒருங்கிணைக்கும் பொறுப்பையும் கொண்டுள்ளது. சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களில் ஒன்று, தொலைத்தொடர்பு மற்றும் தொடர்புடைய துறைகளில் புதிய நுட்பங்களின் அபிவிருத்தி மற்றும் பயன்பாடு பற்றிய ஆராய்ச்சியை ஊக்குவிப்பதாகும். கொள்கை மற்றும் சர்வதேச உறவுகள் பிரிவு உள்ளூர் பல்கலைக்கழகங்கள்/ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு ஆராய்ச்சி ஆய்வுகளை மேற்கொள்வதில் உதவ ஆணைக்குழுவினால் அதிகாரம் பெற்றுள்ளது. தொலைத்தொடர்பு துறையின் அபிவிருத்திக்காக சர்வதேச சிறந்த நடைமுறைகளை மேம்படுத்துவது தொடர்பான சர்வதேச மற்றும் உள்ளூர் நிகழச்சித் திட்டங்கள்/வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதில் ஈடுபடும் பொறுப்பும் இந்த பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்புகளுக்கு பொறுப்பான சர்வதேச ஒழுங்குபடுத்தல் அமைப்புகளுக்கான தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (TRCSL) மையப் புள்ளியாக, ITU, ஆசிய பசிபிக் தொலைத்தொடர்பு (APT), தெற்காசிய தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் பேரவை (SATRC) ஆகியவற்றின் உதவியுடன் இந்த பிரிவு பரந்த அளவிலான ஒழுங்குபடுத்தல், ஒருங்கிணைப்பு மற்றும் துறை அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

திரு. சி.என். பலிஹவடன
பணிப்பாளர்/விசேட திட்டங்கள்
: nishanthap@trc.gov.lk
  : +94 11 2689345

விசேட திட்டங்கள் பிரிவானது தேசிய நலன் சார்ந்த திட்டங்கள் மற்றும் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (TRCSL) அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குப் பொறுப்பாகும். இப்பிரிவு முக்கியமாக தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதன் மூலம் தொலைத்தொடர்பு துறையை மேம்படுத்துவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளது. மேலும், தொலைத்தொடர்புத் துறையில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கு உதவும் ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொள்வது இந்தப் பிரிவு ஆகும்.

திரு. ஜே.ஏ.எஸ். குணானந்தன
பணிப்பாளர் /அலைக்கற்றை முகாமைத்துவம்
: shantha@trc.gov.lk
  : +94 11 689347

திரு. எம்.ஈ.ஜே.எஸ்.முனசிங்க
உதவிப் பணிப்பாளர்/ தரவு சேவைகள்
உதவிப் பணிப்பாளர்/தனியார் செல்லிட வானொலி (பதில்)
: munasinghes@trc.gov.lk
  : +94 11 2689345 Ext - 4126

திரு. டி.எம்.ஜே.பெரேரா
உதவிப் பணிப்பாளர்/ அலைக்கற்றை கண்காணிப்பு மற்றும் அமுலாக்கம்/விமான சேவைகள்
உதவிப் பணிப்பாளர் / நிலையான சேவைகள் (பதில்)
: manoj@trc.gov.lk
  : +94 11 2153555

திருமதி ஜி.எச்.பி. இமாலி பிரசாந்திகா
உதவிப் பணிப்பாளர்/ அலைக்கற்றை திட்டமிடல்
உதவிப் பணிப்பாளர்/ ஒளிபரப்பு மற்றும் IMT (பதில்)
: imali@trc.gov.lk
  : +94 11 2683842

திரு. எஸ்.பி. புலத்கம
உதவிப் பணிப்பாளர் /அலைக்கற்றை முகாமைத்துவம் (IT)
: bulathgama@trc.gov.lk
  : +94 11 2689345 Ext - 4105

திரு. பி.டி.எம்.பி தர்மசேன
உதவிப் பணிப்பாளர்/குறுந் தூர சாதனங்கள்
: pamoaj@trc.gov.lk
  : +94 11 2683842

திரு. இசுரங்க விஜேசிங்க
உதவிப் பணிப்பாளர்/ கடல்சார் சேவைகள்
: ishuranga@trc.gov.lk
  : +94 11 2689345, Ext:4122

வானொலி அலைவரிசை அலைக்கற்றை என்பது இயற்கையான மற்றும் வரையறுக்கப்பட்ட வளமாகும், இது சமுதாயத்தின் வாழ்க்கைத் தரம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை வளப்படுத்த அதைப் பயன்படுத்தி பெறப்படும் நன்மைகளை அதிகப்படுத்த சரியான முறையில் நிர்வகிக்கப்பட வேண்டும். அலைக்கற்றை தொடர்பான அனைத்து விடயங்கள் தொடர்பிலும் இலங்கை தொலைத்தொடர்புச் சட்டத்தினால் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கும் வானொலி அலைவரிசை அலைக்கற்றையை ஒரு அரிதான தேசிய வளமாக திறம்பட நிர்வகிப்பதற்கும் அலைக்கற்றை முகாமைத்துவ பிரிவுக்கு ஆணைக்குழு அதிகாரம் வழங்கியுள்ளது. இலங்கை தொலைத்தொடர்புச் சட்டத்தின் பிரிவு 10(அ) இன் கீழ், இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) வானொலி அலைவரிசை அலைக்கற்றை மற்றும் நிலையான செயற்கைக்கோள் சுற்றுப்பாதை தொடர்பான விடயங்களை நிர்வகிக்கவும் கட்டுப்படுத்தவும், அதன் பயன்பாட்டை திரும்பப் பெறுவது அல்லது இடைநிறுத்துவது அல்லது அத்தகைய அலைவரிசைகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்வது அவசியம் என்று கருதும் போது அதிகாரத்தைப் பயன்படுத்தவும் இலங்கையில் உள்ள ஒரே சட்டபூர்வமான அதிகார சபையாகும். வானொலி தகவல் தொடர்பு சேவைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு உரிமம் வழங்கவும், வானொலி அலைவரிசையைப் பாதுகாக்கவும், வானொலி தகவல் தொடர்பு நிறுவல்களால் ஏற்படும் மின்காந்த இடையூறுகளைக் குறைப்பதற்கான விதிகளுக்கு இணங்குவதைச் செயற்படுத்தவும் சட்டத்தின் பிரிவு 22 இன் கீழ் ஆணைக் குழுவுக்கு அதிகாரம் உள்ளது.