இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு


அடிக்கடி கேட்கப்பட்ட வினாக்கள்

ஒரு வாடிக்கையாளர் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை மேற்கொள்வது எவ்வாறு?

தொலைத்தொடர்புச் சேவைகள் தொடர்பில் உங்களுக்கு ஏதும் பிரச்சனை இருந்தால் முதலில் தொலைபேசி இயக்குநரிடம் முறையிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்? அவ்வாறு முறைப்பாட்டினை மேற்கொண்ட பிறகு :

  1. உங்கள் முறைப்பாடுகளின் ஒரு பிரதியை வைத்துக்கொள்ளவும். உதாரணம் - முறைப்பாடு மற்றும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட கடிதத்தொடர்புகளின் பிரதிகள், தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்தால் அதற்கு கிடைத்த குறிப்பீட்டு எண், நீங்கள் கதைத்த நபர்Æ நபர்கள், முறைப்பாடு செய்த திகதி மற்றும் கிடைத்த பதில்Æகள் போன்றன.
  2. உங்கள் முறைப்பாட்டினை செயன்முறைப்படுத்துவதற்கு உங்கள் தொலைபேசி இயக்குநருக்கு போதியளவு நேரம் கொடுக்கவும்.
  3. தொலைபேசி மூலம் கதைத்து அடுத்த கட்ட நகர்வுகளை விசாரிக்கவும்.

உங்களுக்கு நியாயமானதொரு காலத்தினுள் திருப்திகரமான பதில் கிடைக்காத போது, எழுத்து மூலமான முறைப்பாட்டினை ஆணைக்குழுவிற்கு அனுப்ப முடியும்.

எனது சேவையை திருத்தும் செயற்பாடு தாமதமடைந்துள்ளது. TRCSL க்கு உதவ முடியுமா?

நீங்கள் முதலில் உங்கள் சேவை வழங்குநரின் உதவியை நாட வேண்டும். நீங்கள் இது சம்பந்தமாக வாய்மொழி மற்றும் எழுத்து மூலமான வழிமுறைகளைப் பயன்படுத்தி சாத்தியமான அனைத்து வழிகளிலும் உங்கள் பிரச்சனையை சேவை வழங்குநருக்கு முன்வைத்தாலும் உரிய நிவாரணம் கிடைக்காதபோது TRCSL இனை தொடர்புகொள்ள முடியும். உங்கள் சார்பாக நாம் தொலைபேசி சேவை வழங்குநருடன் கதைக்க தயாராக இருந்தாலும், உங்கள் சேவையை விரைவாக திருத்தித்தருமாறு வலுக்கட்டாயப்படுத்தும் அதிகாரம் எமக்கில்லை என்பதை தயவுசெய்து கவனத்திற்கொள்ளவும்.

என்னை தொந்தரவு செய்கின்ற அல்லது அச்சுறுத்துகின்ற அழைப்புக்கள் வந்தால் நான் என்ன செய்ய வேண்டும்?

  • ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அண்மையிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவும்.
  • அடுத்ததாக உரிய சேவை வழங்குநருக்கு அறிவிக்கவும்.
  • உங்கள் நிலைமையை சீராக்குவதற்கான தற்காலிக நடவடிக்கையாக உங்களை தொந்தரவு செய்கின்ற அல்லது அச்சுறுத்துகின்ற தொலைபேசி இலக்கத்தின் இணைப்பை தற்காலிகமாக துண்டிக்கும் அதிகாரம் சேவை வழங்குநருக்கு உள்ளது.

என்னை தொந்தரவு செய்கின்ற அல்லது அச்சுறுத்துகின்ற அழைப்புக்கள் தொடர்ந்தும் வந்துகொண்டிருந்தால் நான் என்ன செய்ய வேண்டும்?

தொந்தரவு செய்கின்ற அல்லது அச்சுறுத்துகின்ற அழைப்புக்கள் ஒரு குற்றவியல் நடத்தையாகவே கருதப்படும். எனவே, ஒரு முறைப்பாடு கிடைத்ததும் குறித்த நடத்தை தொடர்பாக புலனாய்வு செய்யும் அதிகாரம் பொலிஸுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறு தொந்தரவு செய்கின்ற அல்லது அச்சுறுத்துகின்ற அழைப்புக்களை மேற்கொள்ளும் நபர் தொடர்பான தகவல்களை எனக்கு பெற்றுக்கொள்ள முடியுமா?

இல்லை. முடியாது.

வாடிக்கையாளரின் தகவல்களை இரகசியமாக பேணுவது ஒரு சட்ட ரீதியான தேவைப்பாடாகும். அதனை மூன்றாம் தரப்பினருடன் பகிர்ந்துகொள்ள முடியாது. என்றாலும், புலனாய்வு நோக்கங்களுக்காக நீதிமன்றக் கட்டளை கிடைத்த பின்னர் இத்தகவல்கள் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிக்கப்படும்.