நிறுவனம் தொடர்பான தகவல்கள்
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRCSL) 1996 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்பு (திருத்தம்) சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது. இலங்கையில் தொலைத்தொடர்புகளுக்கான தேசிய ஒழுங்குபடுத்தல் முகவர் என்ற வகையில், ஒழுங்குபடுத்தல் செயல்முறையை வடிவமைத்து, பொது நலன்களைப் பாதுகாத்தல் மற்றும் அதிகரித்து வரும் போட்டித்தன்மையான சந்தைச் சூழலில் சவால்களுக்குப் பதிலளிப்பதன் மூலம் தொலைத்தொடர்பு துறையில் பேண்தகு அபிவிருத்தியை மேம்படுத்துவதுடன், சந்தையில் போட்டித்தன்மை வெளிப்படையாகவும், நியாயமாகவும், பயனுள்ளதாகவும் இருப்பதை இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு உறுதி செய்யும்.
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் (TRCSL) நோக்கங்கள்;
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் (TRCSL) பொறுப்புகள்
செயற்பாடுகள் மற்றும் பொறுப்புகள்
உரிமங்களுக்கான விண்ணப்பங்களைச் செயன்முறைப்படுத்தல்.
கட்டண விதிமுறைகள்.
உரிமம் பெற்ற செயற்படுத்துனர்களால் சட்டம் (அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் உட்பட) மற்றும் உரிமங்களுடன் இணங்குவதைக் கண்காணித்தல் மற்றும் உறுதி செய்தல். வானொலி அலைவரிசை அலைக்கற்றையின் சரியான பயன்பாட்டைக் கண்காணித்து உறுதிசெய்தல். நுகர்வோர் முறைப்பாடுகளுக்கு பதிலளித்தல் மற்றும் விசாரணைகள்/புலனாய்வுகளை நடத்துதல். தரம் மற்றும் பல்வேறு தொலைத்தொடர்பு சேவைகள் பற்றிய தகவல்களை பொதுமக்களுக்கு வழங்குதல் மற்றும் பொது செயல்முறைகள் மற்றும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிதல் மூலம் அவர்களின் பங்கேற்பை ஊக்குவித்தல்.
ஆணைக்குழுவினால் உத்தரவுகள், பணிப்புரைகள் மற்றும் தீர்மானங்களை வழங்குதல்
கட்டளைகள், பணிப்புரைகள் அல்லது தீர்மானங்களை வெளியிடுவதற்கு தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) ஒரு வெளிப்படைத்தன்மையான நடைமுறையைப் பின்பற்றுகிறது. தொழில்துறை பங்கேற்பாளர்கள், நுகர்வோர் மற்றும் ஏனைய ஆர்வமுள்ள தரப்பினருக்கு பொது விசாரணைகள் மற்றும் ஏனைய மன்றங்களில் பங்கேற்க அதிக வாய்ப்பு வழங்கப்படுகிறது. கட்டளைகள், தீர்மானங்கள் அல்லது உத்தரவுகளை வழங்குவதற்கு முன், அனைத்து நபர்களினாலும் வெளிப்படுத்தப்படும் கருத்துக்களை ஆணைக்குழு கவனத்திற்கொள்ளும். ஆணைக்குழு அதன் தீர்மானங்களை மேற்கொள்வதுடன், அதற்கான காரணங்களை கூறி உரிய நேரத்தில் கட்டளைகளையும் பணிப்புரைகளையும் வழங்கும்.
தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (TRCSL) பிரிவுசார்ந்த தொழிற்பாடுகள்
தொலைத்தொடர்பு பணிப்பாளர் நாயகம்
தொலைத்தொடர்பு பணிப்பாளர் நாயகமே முழு நேர ஆணையாளரும் ஆணைக்குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் ஆவார்.
தொழில்நுட்ப பிரிவு
அலைவரிசை முகாமைத்துவ துணைப்பிரிவு
நாட்டின் முழு அலைவரிசை அலைக்கற்றையையும் (திட்டமிடல், ஒதுக்கீடு, ஒப்படை, கண்காணிப்பு, கட்டுப்பாடு, தலையீட்டு கற்கைகள், விசாரணைகள், தணிப்பு மற்றும் நடைமுறைப்படுத்தல் உட்பட) முகாமைத்துவம் செய்வதுடன், சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் வானொலி தொடர்பாடல் துறை (ITU-R மற்றும் WRC) தொடர்பான அனைத்து பணிகளையும் மேற்கொள்கிறது.
வானொலி செயற்படுத்துனர்களுக்கான பரீட்சைகளை மேற்கொள்கிறது.
வலையமைப்பு துணைப்பிரிவு
தேசிய இலக்கமிடல் திட்டத்தைத் திட்டமிட்டு நிர்வகித்தல்;
தொலைத்தொடர்பு செயற்படுத்துனர்கள் மற்றும் தரவு சேவை வழங்குநர்களுக்கான அனைத்து தொழில்நுட்ப திட்டங்களையும் (இலக்கமிடல், சிக்னலிங், ரூட்டிங், ஒத்திசைவு, முதலியன) நடைமுறைப்படுத்துவதுடன், நிர்வகிக்கிறது;
இலங்கையில் தொலைத்தொடர்புகள் துறைக்கான தொழில்நுட்ப தரநியமங்களை நிர்வகித்தல் மற்றும் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் தரப்படுத்தல் துறை (ITU-T மற்றும் WTSA) தொடர்பான அனைத்து பணிகளையும் மேற்கொள்கிறது;;
வலையமைப்புடன் இணைக்க முனைய மற்றும் வலையமைப்பு உபகரணங்களின் வகை அங்கீகாரம் மற்றும் சுங்க அனுமதி நோக்கங்களுக்கான பரிந்துரைகளை மேற்கொள்கிறது;
செயற்படுத்துனர்களுக்கான சிக்னலிங் புள்ளிக் குறியீடுகளைத் திட்டமிடுவதுடன், நிர்வகிக்கிறது;
விற்பனையாளர் உரிமங்களை வழங்குவதற்கான விண்ணப்பங்களை செயன்முறைப்படுத்துகிறது.
பொருளாதார அலுவல்கள் பிரிவு
போட்டி துணை பிரிவு
செலவு அடிப்படையிலான கட்டணங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை நிறுவுவதற்கு செலவு ஆய்வுகள் உட்பட கட்டண பகுப்பாய்வுகளை மேற்கொள்கிறது.
உரிமம் பெற்ற செயற்படுத்துனர்களின் நிதி மற்றும் செயற்பாட்டு செயலாற்றுகை பகுப்பாய்வு மூலம் போக்குகளை கண்காணிக்கிறது.
துறையின் பொருளாதார பகுப்பாய்வை மேற்கொள்கிறது.
இடையிணைப்பின் வர்த்தக விதிமுறைகள் மற்றும் இடை செயற்படுத்துனர் இடையிணைப்பு ஏற்பாடுகளை பகுப்பாய்வு செய்தல்.
சரியான நேரத்தில் உரிமம் மற்றும் மேல்வரி கட்டண சேகரிப்பை உறுதி செய்கிறது.
கிராமிய அபிிவிருத்திக்கான கொள்கைகள் மற்றும் திட்டங்களை ஆணைக்குழுவிற்கு பரிந்துரைக்கிறது.
கிராமிய வளர்ச்சியை விரைவுபடுத்த பொருளாதார ஊக்குவிப்புகளை உருவாக்குகிறது.
புள்ளிவிபரத் தகவல்களைச் சேகரித்து பகுப்பாய்வு செய்கிறது.
துறைசார் பகுப்பாய்வு மூலம் துறைசார் செயலாற்றுகையைக் கண்காணிக்கிறது.
தொழில்நுட்ப உள்ளீடுகளுடன் அனைத்து புதிய செயற்படுத்துனர்களுக்கும் புதிய உரிமங்களைத் தயாரிக்கிறது; தேவைப்படும் போது, இருக்கும் உரிமங்களை மாற்றியமைக்கிறது.
இணக்க துணைப் பிரிவு
நியதிச்சட்டங்கள் மற்றும் உரிமங்களின் இணக்கத்தை கண்காணிக்கிறது.
பொது விசாரணைகள், பட்டியலிடல் கட்டளைகள், பிரிவு உத்தரவுகள் மற்றும் இடையிணைப்பு தீர்மானங்கள் மூலம் தேவைப்பட்டால் செயற்படுத்துனர்களுக்கான TRC இன் உத்தரவுகளை கண்காணித்து செயற்படுத்துகிறது.
சேவையின் தரத்தை கண்காணிப்பதுடன், பொருளாதார ஊக்குவிப்புகளை திட்டமிடுகிறது.
நுகர்வோர் உறவுகள் மற்றும் பாதுகாப்பை முகாமைத்துவம் செய்கிறது.
சேவை (தொழில்நுட்பமற்ற) கடப்பாடுகள் தரத்தின் கண்காணிப்பினை மேற்கொள்கிறது.
உலக வங்கியின் கடன் வசதிகளைக் கையாளுகிறது.
சட்ட அலுவல்கள் பிரிவு
சட்டத்தின் பிரிவு 11 இன் படி உரிம நிபந்தனைகளை அமுல்படுத்துகிறது.
சட்ட விதிகளை வரைகிறது (உ-ம் விற்பனையாளர் உரிம விதிகள்).
பிணக்குகளைத் தீர்ப்பது தொடர்பான பொது விசாரணைகளை நடத்துகிறது (உ-ம் பட்டியலிடல் மற்றும் பட்டியலிடல் தொடர்பான பிணக்குகள்).
அத்தகைய கருத்துகளை தேவைப்படுத்தும் எந்தவொரு விடயத்திலும் அல்லது ஆவணத்திலும் (உ-ம் ஒப்பந்தங்கள், வரைவு உரிமங்கள் போன்றவை) ஆணைக்குழுவுக்கு சட்டக் கருத்துக்களை வழங்குகிறது.
நீதிமன்றங்களில் தொடரப்படும் வழக்குகளில் ஆணைக்குழுவை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
ஆணைக்குழுவிற்கான உத்தியோகபூர்வ கடிதங்கள் மற்றும் ஏனைய கடிதங்களை வரைகிறது.
சட்டரீதியான தாக்கங்களைக் கொண்ட ஆணைக்குழு பத்திரங்களைத் தயாரிக்கிறது.
TRC விதிகள், ஒழுங்குமுறைகள், உத்தரவுகள் மற்றும் தீர்மானங்களை வரைகிறது.
ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகளை வரைவதுடள் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்கிநது.
நியதிச்சட்டங்களுக்கு பொருள்கோடல்களை செய்கிறது.
பிரிவு 18A, மீள்விற்பனையாளர்கள் மற்றும் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் தொடர்பான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துகிறது.
சட்டத்தில் உரிம நிபந்தனைகள் மற்றும் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துகிறது.
நுகர்வோர் முறைப்பாடுகளின் சட்ட அம்சங்களைக் கையாள்கிறது.
நிர்வாகம் மற்றும் கூட்டுறவு அலுவல்கள்
மனித வளங்கள் பிரிவு
உறுதிப்படுத்தல், பதவி உயர்வுகள், லீவுப் பதிவுகள், வருகை மற்றும் ஒழுக்காற்று விசாரணைகள் உட்பட அனைத்து ஊழியர்களுக்கான தனிப்பட்ட கோப்புகளை பேணிவருகிறது.
புதிய பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்கிறது.
அந்தந்த சிரேஷ்ட முகாமையாளர்களுடன் கலந்தாலோசித்து, ஒவ்வொரு பதவிக்கான வேலை விபரங்களுடன், ஆணைக்குழுவுக்கான பணியாளர் திட்டத்தைத் தயாரிக்கிறது.
சிரேஷ்ட செயற்பாட்டுத் தலைவர்களுடன் மனித வள அபிவிருத்தி வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கிறது.
வருடாந்த பணியாளர் பயிற்சித் திட்டத்தைத் தயாரிக்கிறது.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பணியாளர்களுக்கான பயிற்சி நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறது மற்றும் பயிற்சியாளர்களுக்கு தேவையான பயணம், பதிவு மற்றும் ஏனைய ஏற்பாடுகளை செய்கிறது.
பணியாளர் நலன்புரி சேவைகளை வழங்குகிறது, மனக்குறைகளை கையாளுகிறது மற்றும் நிதி மற்றும் நிதி அல்லாத ஊக்கத்தொகைகளை வழங்குவதற்கான ஆலோசனைகளை வழங்குகிறது.
ஊழியர்களுக்கான மருத்துவக் காப்புறுதித் திட்டத்தை நிர்வகிக்கிறது.
தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்கிறது.
நிர்வாக அலகு
ஒப்பந்தச் சேவைகள், கொள்முதல், பராமரிப்புப் பணிகள், வாகனத் தொகுதிகள் முகாமைத்துவம் மற்றும் நலன்புரி நடவடிக்கைகள் உட்பட ஆணைக்குழுவின் பொது நிர்வாகத்தை ஒருங்கிணைத்தல்.
கூட்டுறவு அலுவல்கள் பிரிவு
கூட்டுறவுத் திட்டம், செயற் திட்டம், முன்னேற்ற அறிக்கை மற்றும் ஆண்டறிக்கை தயாரிப்பது தொடர்பான செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல்.
தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (TRCSL) பொதுவான செயற்பாடுகள் தொடர்பாக மேன்மைதங்கிய ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி செயலகம், அமைச்சரவை செயலகம், திறைசேரி, அமைச்சுகள், திணைக்களங்கள் மற்ற ஒழுங்குபடுத்தல் அமைப்புகள் மற்றும் நியதிச்சட்ட அதிகார சபைகளுடன் தொடர்புடைய விடயங்களை ஒருங்கிணைத்து கையாளுதல்.
பொது தொழில்முயற்சிகளுக்கான குழு மற்றும் ஏனைய பாராளுமன்றக் குழுக்களுடன் தொடர்புடைய விடயங்களைக் கையாளுதல்.
கூட்டுறவு சமூகப் பொறுப்பு தொடர்பான விடயங்களைக் கையாளுதல்
நிதி
நிதி (துணை பிரிவு)
வருடாந்த செயற்பாட்டு, மூலதன மற்றும் வருமான வரவு செலவுத் திட்டங்களைத் தயாரிக்கிறது.
பல்வேறு உரிமம் மற்றும் மேல்வரி மற்றும் அலைக்கற்றை-பயன்பாட்டு கட்டணங்களை பட்டியல்படுத்தல் மற்றும் வசூலித்தல்.
வருமான பதிவேடுகளை இற்றைப்படுத்துகிறது, வருமானங்களை சேகரிக்கிறது, நிதிக் கட்டுப்பாட்டைக் கண்காணிக்கிறது, ஆணைக்குழுவின் வருமான முதன்மைக் கோப்பைப் பேணுகிறது.
நிதிப் பயன்பாட்டைக் கண்காணித்து, சம்பளம், ஊதியம், மேலதிக நேரம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் ஆகியவற்றைத் தயாரிக்கிறது மற்றும் கட்டணப் பதிவுகளை இற்றைப்படுத்துகிறது.
இறுதி சொத்து திட்டங்களை பேணுகிறது.
நிதி அறிக்கைகளைத் தயாரிக்கிறது.
உண்மையான வரவு செலவுத்திட்டத்தை கண்காணித்து கட்டுப்படுத்துகிறது.
அரச கணக்காய்வாளர்களுக்கு தொடர்புடைய அறிக்கைகளை தயாரித்து சமர்ப்பிக்கின்றது.
ஆணைக்குழு உறுப்பினர்கள், அமைச்சு அதிகாரிகள் மற்றும் ஏனையவர்களுக்கு அவ்வப்போது தேவைப்படும் தகவல்களை தயாரித்து கிடைக்கச் செய்கிறது.
கொள்கை மற்றும் சர்வதேச உறவுகள்
Policy
International Relations
உரிம நிர்வாகம்
உரிம நிர்வாகம் (துணை பிரிவு)
உரிமங்களை வரைவதுடன், திருத்தங்களைச் செய்கிறது.
உரிம நிபந்தனைகளை அமுல்படுத்துகிறது.
உரிம நிபந்தனைகளுக்கு ஏற்ப உபகரணங்களை அங்கீகரிக்கிறது.
வானொலி அலைவரிசை அலைவீச்சுக்கான வழிகாட்டுதல்களைத் தயாரிக்கிறது.
உரிம நிபந்தனைகளுடன் தொடர்புடைய நுகர்வோர் பாதுகாப்பு சிக்கல்களைக் கையாள்கிறது.
தகவல் மற்றும் ஆவணப் பிரிவு
பின்வருவனவற்றை உள்ளடக்கிய பொது மற்றும் உள்ளக ஊழியர்களுக்கான ஆவண மையத்தையும் நூலகத்தையும் பராமரிக்கிறது: பணியாளர்களினால் தேவைப்படுத்தப்படும் அனைத்து ஆணைக்குழு ஆவணங்கள்; WTO உடன்படிக்கையினால் தேவைப்படுத்தப்படும் பொதுமக்களுக்கான ஆவணங்கள்; தொலைத்தொடர்பு துறை தொடர்பான ஆவணங்கள்.
தகவல் முறைமைகள் திட்டத்தை செயற்படுத்துகிறது.
தற்போதுள்ள பயன்பாட்டு முறைமைகளைப் பராமரித்து ஆவணப்படுத்துகிறது.
ஆணைக்குழுவுக்கான புதிய தகவல் தொழில்நுட்ப பயன்பாடுகளை உருவாக்குகிறது.
ஆணைக்குழு ஊழியர்களுக்கு தொழில்நுட்ப தகவல் தொழிநுட்ப ஆதரவை வழங்குகிறது.
ஆணைக்குழு ஊழியர்களுக்கு தகவல் தொழிநுட்ப பயனர் தளத்தின் பயிற்சியை அளிக்கிறது.
பட்டியல் மற்றும் செய்திமடல் சபை சேவைகள் உட்பட ஆணைக்குழுவின் அனைத்து இணைய செயற்பாடுகளையும் கையாளுகிறது.
இணையதளக் குழுவின் வழிகாட்டுதலின் கீழ் ஆணைக்குழுவின் இணையத் தளத்தைப் பராமரிக்கிறது.
உள்ளக தகவல் வலையமைப்புகளை வடிவமைத்து நடைமுறைப்படுத்துகிறது.
கண்காட்சிகள் மூலம் தகவல்களை சேகரித்து பரப்புகிறது.
Note: குறிப்பு: ஆணைக்குழு பணிப்புரைகளுக்கு ஏற்ப மாற்றத்திற்கு உட்பட்டது