இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு


மதுசங் திசாநாயக பணிப்பாளர் நாயகம்

 

திரு. மதுசங்க திசாநாயக அவர்கள் இலங்கை தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக பொது நிருவாகம், சட்டம் மற்றும் தகவல் முறைமைகள் ஆகிய பல துறைகளில் தனது தொழில்வாண்மை நிபுணத்துவ சேவைகளை ஆணைக்குழுவிற்கு வழங்கிக்கொண்டிருக்கிறார்.

திரு. மதுசங்க அவர்கள், ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளராக பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஜனாதிபதிக்கு ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்புக்களை வழங்கிக்கொண்டிருப்பதோடு ஜனாதிபதி செயலகத்தின் சாதாரண தொழிற்பாட்டிற்கு தனது பங்களிப்புக்களை நல்கிக்கொண்டிருப்பதோடு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக தொலைத்தொடர்புத் துறையில் ஒழுங்குபடுத்தல் முன்னெடுப்பக்களை மேற்பார்வை செய்து தேவையான பணிப்புரைகளை வழங்குவதோடு அவை தொழிற்துறை தராதரங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இயைபாக இடம்பெறுகின்றனவா என்பதையும் உறுதிப்படுத்துகின்றார். அவர் நீதி அமைச்சின் முன்னாள் பணிப்பாளராகவும், இலங்கை பாராளுமன்றத்தின் முன்னாள் சிரேஷ்ட உதவிச் செயலாளராகவும் இலங்கை பிரதமர் அலுவலகத்தின் முன்னாள் உதவிச் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார். ්

திரு. மதுஷன்க திசாநாயக அவர்களின் கல்விப் பயணம் மற்றும் தொழில் நிபுணத்துவம் என்பன இலங்கையின் சட்டம், தகவல் முறைமை மற்றும் பொது நிருவாகம் போன்ற பல்வேறு துறைகளில் அவர் ஆற்றியிருக்கும் பங்களிப்புக்களை பறைசாட்டுகின்றன. அவர் சட்டத்துறையில் சட்டமானிப் பட்டத்தைப் பெற்றிருப்பதுடன் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் தகவல் முறைமை மற்றும் முகாமைத்துவ தகவல் முறைமைகள் கற்கையில் முதுமானிப் பட்டத்தையும் பூர்த்திசெய்துள்ளார். மேலும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொது நிருவாகம் மற்றும் முகாமைத்துவக் கற்கை நெறியில் முதுமானிப் பட்டத்தையும் கர்டின் பல்கலைக்கழகத்தில் கணிணி முறைமைகள் மற்றும் வலைப்பின்னல் கற்கை நெறியில் விஞ்ஞானமானி பட்டத்தையும் பெற்றுள்ளார்.