திரு.வருணா ஸ்ரீ தனபால அவர்கள் இலங்கை நிர்வாக சேவையின் (SLAS) 24 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்ட ஒரு விசேட தர அதிகாரியாவார். 2024 நவம்பர் முதல் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர் முன்னதாக உள்துறை அமைச்சகத்தில் கூடுதல் செயலாளர் (பிராந்திய நிர்வாக சீர்திருத்தங்கள்) (செப்டம்பர் 2020 - நவம்பர் 2024) மற்றும் தரவு பாதுகாப்பு ஆணையத்தின் பதில் பணிப்பாளர் நாயகமாக (நவம்பர் 2023 - நவம்பர் 2024) பணியாற்றினார்.
டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் / சிரேஷ்ட உதவிச் செயலாளர் (2016 – 2020), ஜனாதிபதி செயலகம் (2001 – 2005 மற்றும் 2007 – 2011) மற்றும் சுற்றாடல் அமைச்சு (2015) ஆகிய பதவிகளை அவர் வகித்துள்ளார்.
நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர தூதரகத்தின் (2012 – 2014) அமைச்சர் ஆலோசகராக திரு.தனபால பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை உருவாக்குவதில் பங்களிப்பு செய்தார். 2013 ஆம் ஆண்டில், ஐ.நா பொதுச் சபை அவரை பொருளாதார மற்றும் நிதிக் குழுவின் துணைத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தது, மேலும் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த பல முக்கிய தீர்மானங்களுக்கு பொறுப்பாக இருந்தார். ஜப்பான் கொள்கை கற்கைகளுக்கான தேசிய பட்டதாரி நிறுவகத்தில் சர்வதேச அபிவிருத்தி கற்கைகளில் முதுமாணிப் பட்டத்தையும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுமாணிப் பட்டத்தையும், பேராதனை பல்கலைக்கழகத்திலிருந்து புவிச்சரிதவியல் மற்றும் கணினி விஞ்ஞானத்தில் இளமானி (விசேட பட்டம்) பெற்றுள்ளார்.
திரு.தனபால அவர்கள் இலங்கை கணினிச் சங்கத்தின் (CSSL) தொழில்சார் அங்கத்தவரும், இலங்கை ஜப்பானிய பட்டதாரிகள் சங்கத்தின் (JaGAAS) பொதுச் செயலாளருமாவார்.