திரு.அதுல பண்டார ஹேரத் (LL.B இலங்கை ) சட்டத்தரணி 1986 ஆம் ஆண்டில் ஒரு சட்டத்தரணியாக பதிவு செய்ததுடன், உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மற்றும் நாட்டின் ஏனைய வெளி மாவட்ட நீதிமன்றங்களில் சிரேஷ்ட வழக்குரைஞராக செயற்படுகின்றார்.
மக்கள் வங்கி, செலிங்கோ இன்சூரன்ஸ் கம்பனி பிரைவேட், ஹூபுஹஸ்தான் பிளான்டேஷன் லிமிடெட், தி பினான்ஸ் கம்பனி பிஎல்சி, கெஸ்பாவ மாநகர சபை, லங்கா செராமிக் லிமிடெட், காணி சீர்திருத்த ஆணைக்குழு, கொமர்ஷல் கிரெடிட் பிஎல்சி மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றில் தொழில்சார் சேவைகளை வழங்கி வருகின்றார்.
ஜனசவிய நம்பிக்கை நிதியத்தின் செயற்பாடுகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி ஆணையாளராக நியமிக்கப்பட்ட ஹேரத், அவரது விவேகம், திறமை மற்றும் நம்பகத்தன்மை மீது பெரும் நம்பிக்கை வைத்தார், மேலும் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் காணி சுவீகரிப்பு மீளாய்வு சபைக்கு நியமிக்கப்பட்டு ஐந்து வருடங்கள் சபைக்கும் சேவையாற்றினார். கொழும்பு வாடகை சபையின் தலைவராகவும் ஐந்து வருடங்கள் செயற்பட்டார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) லிமிற்றட் மற்றும் துறைமுக அதிகாரசபை ஆகியவற்றின் பணிப்பாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
2006 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட "ஆதாரக் கட்டளைச் சட்டம் மீதான வழக்குச் சட்டம்" என்ற நூலின் ஆசிரியரான இவர் சட்டத்தரணிகள் மற்றும் நீதிபதிகளுக்கு மிகவும் பரிந்துரைக்கப்பட்ட புத்தகமாகும், மேலும் 2014 முதல் 2021 வரையிலான ஆண்டுகளுக்கான "உச்ச நீதிமன்ற சட்ட அறிக்கை" (A.B.H.LAW REPORT) தொகுத்தவர் ஆவார்.