இலங்கையில் இலக்கமிடுதல் வளங்கள் உள்ளடங்கலாக தொலைத்தொடர்புகள் துறைக்கான தேசிய இலக்கமிடுதல் திட்டத்தினை நிர்வகிப்பது இலங்கை தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவாகும். இலக்கமிடுதல் திட்டமானது இலக்கமிடுதல் வளத்தைப் பயன்படுத்துவதற்கான சட்டகம் மற்றும் வழிகாட்டல்களை வழங்குகின்றது.
சிற்றலைக் குறியீடுகள்
சர்வதேச தொலைத்தொடர்புச் சேவைகளை விஞ்சலாம் எனும் நோக்கில் 1991 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க தொலைத்தொடர்புகள் சட்டத்திலும் 1996 ஆம் ஆண்டு 27 ஆம் இலக்க அதன் திருத்தச்சட்டத்திலும் இலங்கையில் VOIP அனுமதிக்கப்படுவதில்லை. எனவே, கீழே குறிப்பிடப்படுகின்ற VOIP செயலிகள் இயக்குநர்களால் தடைசெய்யப்பட்டுள்ளன
என்றாலும், சில நிறுவனங்களுக்கு VOIP இன் பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் புரிந்துகொண்டுள்ளோம். எனவே, சில பயனர்கள்Æ வாடிக்கையாளர்கள் Æ சேவையுறுநர்களுக்கு VOIP செயலியின் தடையை நீக்குவதற்கான வேண்டுகோளை சமர்ப்பிக்க முடியும்..
செயலியை தடுப்பதற்கான தொழிநுட்ப பரமாணங்கள்
இல | தொழிநுட்ப பரமாணங்கள்Æ நிபந்தனைகள் | விபரம் |
01 | இணைப்பு வகை |
இணைப்பு வகை சமச்சீர் அகலப்பட்டை, தரவு பரிமாற்றத்திற்காக இரண்டு இடங்களை இணைக்கும் தொடர்பாடல் இணைப்பு (leased line), IPLC எனும் இரண்டு சர்வதேச இடங்களுக்கிடையில் நேரடியான, நம்பகமான, பாதுகாப்பான இணைப்பினை வழங்கும் தொடர்பாடல் இணைப்பு. ADSL,GPRS,3G,HSPA,Wimax போன்ற தொழிநுட்பங்களைப் பயன்படுத்தும் இணைப்புக்கள் |
02 | அகலப்பட்டை | ≥ 1Mbps |
03 | ப்ரொடோகோல்Æ செயலி | VOIP உடன் தொடர்புடைய செயலி, ப்ரொடோகோல், முனையங்கள் போன்றன. SIP H.323,IAZ.RTP,MGCP.H.248,Megaco,SCCP போன்று சட்டத்திற்கு முரணான மாற்றுவழிக்கு பயன்படுத்தக்கூடும் என சந்தேகிப்பவை மற்றும் அவற்றுடன் தொடர்புடைய H323 (TCP1720),SIP (TCP/UDP 5060-5061) போன்ற முனையங்கள். |
தடைநீக்கத்திற்கு அல்லது செயலியை தடைசெய்வதிலிருந்து விலக்களிக்குமாறு கோருவதற்கு தகுதியுடைய பயனாளர்கள்/ வாடிக்கையாளர்கள்/ சேவையுறுநரின் வகையீடு
VOIP வசதிகளை செயல்படுத்தும் செயன்முறை