இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு




அரச சேவைகள் சவால் கிண்ணம் 2024 மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இலங்கை தொலைத்தொடர்புகள் ....

15 01 2025 - 14:00 PM

அரச சேவைகள் சவால் கிண்ணம் 2024 மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு இரண்டாம் இடத்தைப் தனதாக்கியது.

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRCSL) அரச சேவைகள் சவால் கிண்ணம் 2024 மென்பந்து கிரிக்கெட் போட்டியில் இரண்டாம் இடத்தை பெருமையுடன் தனதாக்கிக்கொண்டது.

இந்த போட்டியில் இலங்கையின் பல்வேறு அரச நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 16 அணிகள் பங்குபற்றின. தொடர் போட்டிகளின் பின்னர் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தம் ஆணைக்குழுவின் அணியும் கல்வித் திணைக்கள அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

இறுதிப் போட்டி 13 டிசம்பர் 2024 அன்று கொழும்பு ஷாலிகா மைதானத்தில் நடைபெற்றது. அணியின் தலைவர் திரு நீலங்க ரணசிங்க அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ், TRCSL அணி அபரிதமான திறமை மற்றும் குழுப்பணியை வெளிப்படுத்தி, இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. இதற்கு மேலதிகமாக, திரு.நீலங்க ரணசிங்க அவரது சிறந்த செயல்திறனுக்காக கௌரவிக்கப்பட்டு போட்டியின் சிறந்த பந்துவீச்சாளர் என்ற பட்டத்தையும் பெற்றார்.

TRCSL பணிப்பாளர் நாயகம், எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) பந்துல ஹேரத் குழுவினரை அவர்களின் குறிப்பிடத்தக்க சாதனைக்காக வாழ்த்தியதுடன், அவர்களின் விளையாட்டுத்திறன் மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டினார்.

இந்தச் சாதனையானது TRCSL இன் களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்