இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு




“மீண்டெழும் இலங்கை” (Rebuilding Sri Lanka) நிதியத்திற்கு TRCSL ஊழியர்கள் நன்கொடை

05 01 2026 - 04:30 AM

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் (TRCSL) ஊழியர்கள் தமது ஒரு நாள் சம்பளம் மற்றும் ஊழியர் நலன்புரிச் சங்கத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து, சுமார் 12.8 மில்லியன் ரூபாவிற்கும் அதிகத் தொகையை “மீண்டெழும் இலங்கை” (Rebuilding Sri Lanka) நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

இந்த நிதிப் பங்களிப்பு, TRCSL இன் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) பந்துல ஹேரத், நிர்வாகப் பணிப்பாளர் விங் கமாண்டர் (ஓய்வுபெற்ற) சேனக ருவன்பத்திரன மற்றும் நிதிப் பணிப்பாளர் திரு. எம்.கே. ஜயந்த ஆகியோரால் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்