இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு




எண் பெயர்வுத்திறன்

30 09 2024 - 19:19 PM

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRCSL) எண் பெயர்வுத்திறன் (Number Portability - NP) சேவையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடமிருந்து கேள்விகளைப் பெற்று வருகிறது. NP சேவையை செயல்படுத்த ஆணைக்குழு பின்வரும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.


ஆரம்பத்தில், ஆணைக்குழு  தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுடன்  கலந்துரையாடி NP சேவையை செயல்படுத்த ஒரு திட்டத்தை உருவாக்கியது.
2021 ஆம் ஆண்டில் ஒரு பொது ஆலோசனை அறிக்கை வெளியிடப்பட்டது, மேலும் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களின் கருத்துக்களும் பெறப்பட்டன.
பின்னர் தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்களுடன் கலந்தாலோசித்து பொருத்தமான தொழில்நுட்ப மாதிரி முடிவு செய்யப்பட்டது. NP சேவையின் செயற்பாடு மற்றும் நிர்வாகத்திற்காக அனைத்து நிலையான மற்றும் மொபைல் சேவை வழங்குநர்களின்  பங்களிப்புடன் லங்கா நம்பர் போர்ட்டபிலிட்டி சேர்விசஸ் (உத்தரவாதம்) லிமிடெட் (LNPS) என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது.
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவானது  LNPS க்கு NP சேவையின் செயல்பாட்டிற்குத் தேவையான உரிமத்தை வழங்கியது.
தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களின்  ஒருங்கிணைப்புடன் தயாரிக்கப்பட்ட NP  சட்டவிதிகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப முறைமையை வழங்குவதற்கு பொருத்தமான நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான கொள்முதல் செயல்முறையை LNPS ஆரம்பித்துள்ளதுடன், தொழில்நுட்ப மதிப்பீடு நிறைவடைந்துள்ளது. நிதி மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும், 2025 ஜனவரி மாதமளவில் நிறைவுசெய்ய  முடியும் என்றும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முழு கொள்முதல் செயல்முறையும் முடிந்ததும், LNPS பொருத்தமான உபகரண விநியோகத்தரை  தேர்ந்தெடுத்து அமைப்பின் நிறுவலை முடிக்கும். அதன் பின்னர் NP  சேவை வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

புதிய செய்திகள்